Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 69

என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 69

153
0
SHARE

கேள்வி ?

நான்  சுய  இன்பம்  செய்வேன் . ஒருமுறை  ஓரின  சேர்க்கையில்   திருமணமான  நடுத்தர  வயதுள்ளவரிடம்  ஈடுபட்டேன் . நான்  திருமணம்  செய்ய வில்லை. என்  ஆணுறுப்பின்  மேல்  நடுப்பகுதியில்  வேர்க்குரு  போல்  சீழ்க்கட்டி  வந்தது . அதை  உடைத்து  துடைத்து  தேங்காய்  எண்ணெய்  தடவினேன். சரியாகிவிட்டது . இது  நடந்து  ஓராண்டு  ஆகிவிட்டது . இதனால்  எனக்கு  ஏதேனும்  பாதிப்பு  உண்டாகுமா ?
இதை  வி. டி . என்கிறார்களே , இதன்  அறிகுறிகள்  பின்னாளில்  எயிட்ஸாக  மாறுமா ?  மறுமுறை  சென்றால்  இதே  பாதிப்பு  ஏற்படுமா ?

பதில் :

ஓரின  சேர்க்கையில்  ஈடுப்பட்ட  பிறகு  ஆண்குறியில்  கட்டி  அல்லது  புண்  ஏற்பட்டிருந்தால்  அது  பால்வினை  நோயாக  இருக்கலாம் . பொதுவாக   பால்வினை  நோய்கள்  எல்லாமே  மருந்து  எடுத்து கொள்ளாவிடினும்  குணமாவதுபோல்  மறைந்து  பின்பு  மீண்டும்  வெளியே  அதிக  சிக்கல்களுடன்  தோன்றும் . எனவே , நீங்கள்  முழுமையான  உடற் பரிசோதனை  மற்றும்  தேவையான  ரத்த  பரிசோதனைகளை  செய்து கொள்ள வேண்டும் . இது போன்ற  தொடர்புகளில்  மறுமுறை  ஈடுபடுவது  மிகவும்  ஆபத்து.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here