Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

98
0
SHARE
Expressing affection

பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

ஆ. சமூகம் சார்ந்த விஷயங்களை சொல்லிக்கொடுங்கள் 

 

ன்னைப் பற்றிய விவரங்கள் தவிர மாற்றங்களைப் பற்றிய எல்லாமே சமூகம் சார்ந்தவை. எனவே, எப்படி நடந்து கொள்ளவேண்டும். யாரிடம் எப்படி பேசவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லவேண்டும்.

குழந்தை கெட்ட வார்த்தைகளைப் பேசினால், பிரம்படி தருவதைவிட இந்த வார்த்தைக்கு இன்ன பொருள், இதைப் பேசுவது தவறு என சுட்டிக் காட்டுங்கள். அதே போல, இது தப்பு, இப்படி பேசக்கூடாது என சொல்லித் தராமல், ஏன் பேசக்கூடாது என்பதைக் கற்பியுங்கள்.

நண்பர்களிடம் பழகும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக எதிர்பாலினரோடு பழகும்போது எவ்வாறு நடப்பது, பெரியோரிடம் எவ்வாறு நடந்துகொள்வது, வீட்டுக்கு வருபவர்களை எவ்வாறு உபசரிப்பது, வெளியில் சென்றால் எவ்வாறு நடந்துகொள்வது என்பதை தெளிவாகக் கூறுங்கள்.

தந்தையோ, சகோதரனோ, மாமனோ, பிறரோ, யாராக இருந்தாலும் ஒரு படி விலகியிருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும், அவ்வாறு நெருங்காததால் யாருக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது என்பன போன்ற விவரங்களையும் சொல்லுங்கள்.

உணர்வுப் பூர்வமான உறுப்புகளை மற்றவர்கள் தொட அனுமதித்தால் என்ன ஆகும்? உணர்வைத் தூண்டும் விதமாக பிறர் பேசினால் என்ன ஆகும் என்ற விவரங்களைக் கற்றுத் தாருங்கள்.

இவையெல்லாம் அவசியம்தான், ஆனால் அவற்றை அறிவுரையாகக் கூறாதீர்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு அறிவுரைகள் பிடிக்காது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இ. அன்பு காட்டுங்கள், செல்லம் வேண்டாம் 

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ இயல்பாக, அவர்கள் தங்களைப் பற்றி தெரிந்துகொண்டிருப்பார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். ஆகவே, அவர்கள் இயல்புக்கு மாறாக அவர்கள் நடக்க மாட்டார்கள், நடக்கவும் ஊக்கப்படுத்தாதீர்கள்.

எல்லாருக்குமே தான் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வு இருப்பதால் இருவரையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள். குழந்தைக்கு அதிகமான அரவணைப்பைக் கொடுக்கவேண்டும்; ஆனால் செல்லம் கொடுக்கக்கூடாது. இந்த விஷயத்தில் கண்டிப்பு இருக்கவேண்டும்.

பிரம்பைக் கையாளாதவன் தன் பிள்ளையை பகைக்கிறான் என பைபிள் கூறுகிறது; கண்டித்து வளர்க்கப்படாத பிள்ளையும், கிளை ஒடித்து வளர்க்கப் படாத முருங்கையும் பயன்படாது என்பது தமிழகத்து வழக்கு மொழி.

கண்டிக்க வேண்டிய விஷயங்களில் ‘ஐயோ பாவம், ஒரே பிள்ளை, இவனுக்கு ஒன்னுன்னா என்னால் தாங்க முடியாது, தனிமையில் இருகிறான்’ என கண்டிக்க வேண்டிய விஷயத்தில், சாக்குப் போக்கு சொல்லி மெத்தனமாக இருக்கவிடாதீர்கள். அப்படி விட்டால், உங்கள் குழந்தை முதிர்ச்சியடைய வேண்டிய

விஷயங்களில் முதிர்ச்சியடையாமல் போகநேரிடும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here