Home Women Part பெண்   பாகம் – 99

பெண்   பாகம் – 99

197
0
SHARE
37671526 - children active growth portrait, little kids from 6 months to 1 year old, baby activity crawling sitting and standing boy

குழந்தை  பராமரிப்பு 

முதல் முறை பிரசவித்த  தாய்  மார்களுக்கு  குழந்தையை  எவ்வாறு  கையாள்வது  என்பதில்  போதிய  அனுபவம்  இருக்காது . குழந்தை  அழுதால்  பசிக்காகத்தான்  அழுகிறது  என  நினைப்பார்கள் . அழுக்கான உள்ளாடை, உடையை  ஈரப்படுத்திகொண்ட நிலை  ஆகியவற்றினாலும்  அழும் . ஆகவே ,
குழந்தை  அழுதாலும் , சிரித்தாலும்  அதற்கான  காரணத்தை  தெரிந்துகொள்ள  தாய்  முற்பட  வேண்டும் .

குழந்தையை  தூக்கும்போது  அதன்  தலையையும் , புட்டதையும்  பிடித்துத்தான்  தூக்க  வேண்டும் . தலையையும்  தோளையும்  தாங்கிட  வசதியாக  ஒரு  கையை  கழுத்து கீழேயும் , புட்டத்திற்கு  அடியில்  இன்னோரு  கையையும்  கொடுத்து  தூக்குவது  குழந்தையை  தூக்கும்  முறை.

குழந்தைக்கு  உடை  அணிவிக்கும்போதும் , அந்தந்த  சீதோஷண நிலைக்கு  தக்க  உடை  அணிவிக்க  வேண்டும். துணியை  சுருக்கி  குழந்தையின்  கை , தலைகளுக்குள்  மாட்டிய  பிறகு அதன் உடல்  முழுவதையும்  போர்த்தலாம். இறுக்கமான  ஆடை  அணிவிப்பதையும்  தவிர்க்க  வேண்டும். டயாபர்  பயன்படுத்தலாம் . பருத்தி  ஆடைகள்  நல்லது.

குழந்தையை  படுக்க  வைக்கும்போது  முதுகுக்கு  ஆதாரமாக  துணிகளை  வைத்து  தொட்டிலில்  கிடத்தலாம். குழந்தையின்   தலைப்பகுதி  பெரிதாக  இருப்பதாக  நினைத்து அழுத்திவிட  கூடாது.  அதன்  கபால  எலும்புகள்  இணைய  12 முதல்  18 மாதங்கள்  வரையாகலாம் என்பதாலும் , அதற்கு  ரப்பர்  போன்ற  சவ்வினால்தான்  கபாலம்  சூழப்பட்டிருக்கும்  என்பதையும்  அறிந்து  கொள்ள வேண்டும் .

குழந்தையின்  சருமம்  மஞ்சள்  நிறத்திலிருந்தால்  அதற்கு  காமாலை  நோய்  வந்திருக்கக்கூடும் . கண்களும்  மஞ்சளாக  மாறியிருக்கும் . இது  ஒருவாரத்திற்கு   பிறகு  தானாக  மறைந்துவிடும் . அவ்வாறுஇல்லாமல்  தொடர்நது  நீடிக்குமானால் , தாய்க்கும்  குழந்தைக்கும் இரத்தம்  பொருத்தம்  இருக்காது . மருத்துவ  சிகிச்சை  மேற்கொள்ள வேண்டியிருக்கும். கவனிக்காமல்  விட்டுவிட்டால் மூளை  கோளாறு  வரும்.

குழந்தையை  எத்தனை  நாளுக்கு  பிறகு  குளிப்பாட்டலாம் என  புதிய  தாய்க்கு  தெரியாது . பிறந்த  இரண்டாவது  நாளிலிருந்து  குழந்தையை  குளிப்பாட்டலாம் . குளிப்பாட்ட  இளஞ்சூடான     நீர்  போதுமானது . முதலில்  தலை, கண், பிறகு  உடல்  என  சுத்தம்  செய்ய  வேண்டும் . மென்மையான  துணியால்  துவட்டி  எடுக்க  வேண்டும் . தொப்புள்  கொடி  நனையாமல்  பார்த்து  கொள்வது  நல்லது. தலைக்கு  எண்ணெய்  வைத்து  குழந்தையை  குளிப்பாட்ட  கூடாது .

குழந்தையை  அழகு படுத்துவதற்காக   மை  திட்டாதீர்கள் . நோய்  தொற்று  ஏற்படலாம் . காதுகளில்  பட்ஸ்  வைத்து  குடைய  கூடாது . தும்மல்  வந்தால்  சுவாச  பாதை  சுத்தமாகும் . வெளிப்பக்க  காதை  மட்டும்  சுத்தமாக்கினால்  போதும்.

டயாபர் அணிவிப்பதால்  குழந்தையின்  புட்டங்களில்  பொறிப்பு  கொப்புளங்கள்  ஏற்படலாம் . இறுக்கமான  ஆடைகளை  அணிவிக்காதீர்கள் . குறைந்த  ஆடை  அணிவித்தாலே போதுமானது . டயாபர்  ஈரமானாலோ , அழுக்கானாலோ  உடனடியாக  மாற்றிவிடுங்கள் . அதை  வெந்நீரில்  அலசி  எடுங்கள் . புட்டப்பகுதி  காற்று  படுமாறு  வைத்தால்  கிருமிகள்  சேராது .

குழந்தை  பிறந்த  பிறகு  அடிக்கடி  அதன்  எடையை  பதிவு  செய்யுங்கள் . திடீரென  எடை  குறைந்து  போனால்  மருத்துவரிடம்  எடுத்து செல்லுங்கள் .

குழந்தை  வளர்ப்புக்காக  ஆயாக்களிடம்  அட்வைஸ்  கேட்காமல்  குழந்தை நல  மருத்துவர்  மற்றும்  மகப்பேறு  மருத்துவரிடம்  ஆலோசனை  கேட்டு  அதன்  படி  நடப்பது  குழந்தையை  சிறப்பாக  வளர்க்கும்  முறைகளாகும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here