Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 71

என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 71

267
0
SHARE

கேள்வி ?
நான்  வேலை  நிமித்தமாக  வெளியூர் விடுதி  ஒன்றில்  தங்கியிருக்கும்போது  முதன்முதலாக  ஒரு  பெண்ணுடன்  பாலுறவு  கொண்டேன் . எய்ட்ஸ்  கிருமி  ஏதாவது  ரத்தத்தில்  கலந்திருக்குமா ? இதை  எப்படி  தெரிந்து  கொள்வது ?

பதில் :

இவ்வாறு  தெரியாத  பெண்ணுடன்  பாலுறவு  வைத்து  கொண்டாலோ , பல  பெண்களுடன்  பாலுறவு  வைத்து கொண்டாலோ  உங்களுக்கு  பால்வினை  நோய்கள்  மற்றும் எய்ட்ஸ்  வர  வாய்ப்புள்ளது . எனவே, இனிமேல்  மனைவியை தவிர , மற்ற  பெண்களுடன்  இப்படி  பழக்கம்
வைத்து  கொள்ளாதீர்கள் .

திருமணம்  ஆகாதவராக  இருந்தால்  சுய  இன்பம்  பாதுகாப்பானது  அல்லது  நிரோத்  போன்ற காப்பறை அணிந்து  கொள்ளுங்கள் . இப்போது  எச்ஐவி  சோதனை செய்தாலும் , இல்லை  என்று  வரலாம். ஏனெனில், ஆய்வுகள்  மூலம்  எய்ட்ஸ்  தொற்று  இருக்கிறதா  என  அறிய  மூன்று  மாதங்கள்  காத்திருக்க  வேண்டும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here