Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

445
0
SHARE
தூக்கமின்மை

விடலைகளுக்கு வேண்டிய முதிர்ச்சிகள் 

 

விடலைப் பருவத்தில் முதிர்ச்சி அதாவது மெச்சூரிட்டி என்பது பின்வரும் வழிகளிலேயே ஏற்படுகிறது.

  1. ஆண்டுகளின் எண்ணிக்கை
  2. உடல் ரீதியான முதிர்ச்சி
  3. அறிவு ரீதியான முதிர்ச்சி
  4. உணர்வுப் பூர்வமாக முதிர்ச்சி
  5. சமூக ரீதியாக முதிர்ச்சி
  6.  தத்துவரீதியான முதிர்ச்சி

இவற்றின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண்டுகளின் எண்ணிக்கை

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் உங்கள் பிள்ளைக்கு ஒரு வயது கூடிக் கொண்டே போகிறது என்பதை அறிவீர்கள். இதை எப்போதும் மாற்றிட இயலாது. ஆண்டில் ஒன்றைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ இயலாது. வெளியில் வேண்டுமானால் வயதைக் கூட்டியும் குறைத்தும் கூறலாம்.

ஆண்களை எடுத்துக் கொள்ளுங்கள், எப்போதும் தங்கள் வயதில் ஒன்றிரண்டைக் கூட்டியே சொல்வார்கள். காரணம், பிறரைக் காட்டிலும் தான் முயற்சியுள்ளவன் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக; பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள், தங்கள் வயதில் ஒன்றிரண்டைக் குறைத்தே சொல்வார்கள்; காரணம், தாங்கள் இன்னும் இளமையுடன் இருப்பதாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதற்காக.

வயது முதிர்ச்சியடைவது பலவிதங்களில் நன்மை தரக் கூடியது. எடுத்துக்காட்டாக, வாக்குரிமை, வாகன உரிமம், வங்கிகளில் கணக்கு வைப்பது, திருமணம் செய்துகொள்வது என பலவழிகளில் இது உதவும். கூடவே, சிறுவரை விடலையாக்கி, விடலையை முதிர்ந்த மனிதராக்குவது வயது.

உடல் ரீதியான முதிர்ச்சி

உடல் ரீதியாக எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

சுமார் பதிமூன்று வயது வாக்கிலிருந்து உடல் வேகமாக வளரத் தொடங்கும், விரைகள் வளரும். பெண்களை விட ஆண்கள் மெதுவாக வளருவார்கள். ஆனால் நீண்ட காலம் இளமையோடு இருப்பார்கள். பெண்கள் வேகமாக வளருவார்கள், ஆனால் விரைவில் முதிர்ச்சியடைந்து விடுவார்கள். காரணம் என்னவென்றால், ஆணின் ஹார்மோன் பெண்ணுக்கு சுரக்கும் போது அவளது வளர்ச்சி துரிதமாக இருக்கும், சுமார் இருபது வயதில் ஆணுக்குரிய ஹார்மோன் அளவு பெண்ணிடம் குறைந்துவிடுவதால் பெண்ணுக்கு வளர்ச்சி நின்றுவிடும்.

அதே சமயம், இந்த ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக சுரப்பதால் விடலைப் பருவத்தில் பையனுக்கு தோள் பட்டை விரிவடைதல், குரலில் மாற்றம், தொண்டை பெரிதாவது, முகத்தில் மீசை மற்றும் தாடி போன்றவை தோன்றுதல் ஆகியவை இருக்கும். முகத்தில் மூக்கு மற்ற உறுப்புகளை விட பெரிதாக வளரும், கால்கள் பெரிதாகும். இவ்வாறே படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் வளர ஆரம்பிக்கும்.

ஒவ்வொருவரும் தங்களுக்குரிய குறிப்பிட்ட உயரம், எடை வந்த பிறகு உடலின் இந்த வளர்ச்சி நின்று முதிர்ச்சி ஆரம்பிக்கிறது. வேகமாக வளரும் விடலைகள் மிக விரைவில் வளர்ச்சி நின்றநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மெதுவாக வளரும் இயல்பு கொண்டவர்களின் வளர்ச்சி நீண்ட நாட்களுக்குத் தொடரும்.

உடலில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் முதிர்ச்சியடைந்த மனிதருக்கு ஏற்றவகையில் செயல்படுவதற்கு உடலை வலுவுள்ளதாக்குகின்றன. இதனால்தான் சிறுவயதில் எடுக்கவோ, தூக்கவோ சிரமமாகத் தெரிந்தவையெல்லாம் முதிர்ச்சியடைந்த பருவத்தில் மிகவும் எளிதாகத் தோன்றுகிறது.

இந்த வயதில் மேற்கொள்ளும் விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், பணிகள், செயல்கள், நிர்வகிக்கும் பொறுப்புகள் எல்லாம் அவர்களின் முதிர்ச்சியின் அடிப்படையில் நடக்கும்.

வயதாகிவிட்டது, வாலிபப் பருவத்திற்குள் நுழைந்து விட்டேன், ஆனால் போதுமான பலமில்லை, சிந்தனைகள் சாத்தியப்படவில்லை என்றால், உங்கள் பிள்ளையின் முதிர்ச்சியில் எங்கோ குறையிருப்பதாக பொருள். அது எங்கே என்பதை தகுந்த மருத்துவர் மூலம் அறிந்து சரிபடுத்திக்கொள்ளுங்கள்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here