Home Common Health Problems பித்தப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்

    பித்தப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்

    81
    0
    SHARE

    பித்தப்பையானது, ஈரலுடன் இணைந்திருக்கும் ஒரு சிறு பை. கொழுப்புச்சத்து நிரம்பியஉணவுகளைச் செரிக்க உதவுகிற பச்சை  நிறத்திலிருக்கும் பித்தநீர் இந்தப் பையில்சேர்க்கிறது.  40 வயதுக்கு மேலான, உடல் பருமனும் நீரிழிவும் உள்ளவர்களிடம் பொதுவாகப் பெண்களிடம் பித்தப்பை நோய் அதிகமாக காணப்படுகிறது.

    பித்தப்பை நோய்க்கான அறிகுறிகள்

    வயிற்றின் வலது விலாவின் ஓரத்தில் சுரீரென்ற வலி.  இந்த வலி சமயங்களில், மேல் முதுகின் வலதுபக்கம் வரை பரவுகிறது.

    செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்து அல்லது  அதற்குப் பிறகு இவ்வலி ஏற்படலாம்.

    கடுமையான வலி, வாந்தியை கூட ஏறுபடுத்தலாம்.

    கடுமையான பாதிப்பில் காய்ச்சல் இருக்கும்

    எப்போதாவது, கண்கள் மஞ்சள் நிறமாக மாறும்

    சிகிச்சை

    வலியைத் தவிர்க்க வலிநிவாரணிகளை பயன்படுத்தலாம்

    அதிக வீரியமிக்க வலி  பெரும்பாலும் தேவைபடலாம்.

    நோயாளிக்குக் காய்ச்சல் இருந்தால் காய்ச்சல் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்

    எண்ணெய் அதிகமாக சேர்த்த பதார்த்தங்களைச் சாப்பிடாதீர்கள்.

    பருமனாக இருப்பவர்கள் சாப்பாட்டின் அளவைக் குறைத்துப் பருமனைக் குறைக்கவேண்டும்

    நோய் கடுமையாக அல்லது நாள்பட்ட வலி இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியைநாட  வேண்டும்.

    தடுப்பு முறைகள்

    பருமனாக இருக்கும் பெண்கள் எடையைக் குறைக்க வேண்டும்.

    மிகச் செறிவான, இனிப்பான, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்

    மிக அதிகமாகச் சாப்பிடாதீர்கள்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here