Home Common Health Problems புகைத்தல் அல்லது புகையிலை மெல்லுதல்

புகைத்தல் அல்லது புகையிலை மெல்லுதல்

415
0
SHARE

 

ந்தியாவில் சிகரெட் அல்லது பீடி புகைப்பவர்கள், புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட 4 மடங்கு அல்லது 400 சதவீதம் இதய நோய் தோன்றும் வாய்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் பார்மிங்காம் என்னும் ஒரு சிறிய நகரத்தில் பார்மிங்காம் இதய நோய்  ஆய்வுக் கழகம்,5000 குடும்பங்களுக்கு 30 வருடங்களுக்கு மேலாக ஒரு ஆய்வு செய்தது.

புகைபிடித்தல் உறுதியாக மாரடைப்பு நோய் அபாயத்தை அதிகப்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் முடிவு செய்யப்பட்டது. அதே மக்களைத் தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்த போது, புகைபிடித்தலை நிறுத்திய பின்னரும் கூட மக்களுக்கு மாரடைப்பு நோய்க்கு இலக்காகும் வாய்ப்பு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

புகைபிடிப்பவர்கள் புகைத்தலை நிறுத்திய பின்னர் 5 வருடங்கள் கழித்தும் கூட இதய நோய்க்கு ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள்.

புகை பிடிப்பதால் ஏற்படுகிற இதய நோய் ஆபத்தின் அதிகரிப்பு புகை பிடிக்கும் அளவுக்கும், அதன் காலத்தின் நீட்சிக்கும் தொடர்புடையது.  ஒரு நாளைக்குப் பத்து சிகரெட்டைப் பயன்படுத்தும் ஒருவர் 5 சிகரெட்டுகளைப் பயன்படுத்துவரைக் காட்டிலும் 2 மடங்கு அதிக ஆபத்திலிருக்கிறார்.

புகை பிடிக்கும்போது உள்ளே சுவாசிக்கப்பட்ட இலையின் புகை இதய இரத்தக் குழாய்களின் உட்சுவர்கள் பாதிக்கக் காரணமாகிறது. புகையிலையில் உள்ள ஆயிரக்கணக்கான வேதியியல் பொருட்களில் நிக்கோட்டின், தார், ஆல்கலாய்டுகள் முதலியவைகள் இந்த நாசத்தைச் செய்து உட்சுவர்களைக் கொலஸ்ட்ராலும், கொழுப்புகளும் படியாத்தக்கதாக மாற்றிவிடுகிறது. இரத்தக் குழாய்களின் உட்புறம் க்ளூ என்னும் பசையைத் தடவி அதில் ஒரு பொருள் சிக்கிக்கொள்ளுவது போல மேலே சொன்ன வேதியியல் பொருள்கள் கொலஸ்ட்ராலைப் பிடித்து ஒட்டவைத்துக் கொள்கின்றன .

புகையிலையை  எந்த  உருவத்தில்  பயன்படுத்தினாலும் புகைபிடித்தல்  எவ்வளவு கெடுதலைத் தருமோ ,அதற்கு சமம் என்று ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும் .

ஜர்தா ,டம்பாக்கு ,குட்கா ,கைனி ,மூக்குப்பொடி ,பல்லை சுத்தப்படுத்தப்  பயன்படுத்தும் புகையிலை ஆகியவை மிக மோசமானவை .அவைகள் தீய விளைவுகளைக்   கொடுக்கின்றன .அவைகளும் அடைப்புகளுக்கு  இட்டுச்செல்கின்றன.

இந்திய மருத்துவக் கழக அட்டவணைப்படி  புகைபிடித்தல்  உடல் நலத்திற்குக்  கெடுதலைத் தருகிறது.  நுரையீரலை நாசம் செய்து பிராங்க்கைட்டிஸ் ,ஆஸ்துமா ஆகியவற்றில் கொண்டுபோய்  விடுகிறது.நுரையீரலில் புற்று  நோயை உண்டாக்குகிறது .புகை பிடித்தல்           குடற் புண்ணையும் ,புகையிலை மெல்லுதல் உணவுப் பாதை அழற்சியையும் உண்டாக்குகிறது.       பெரிய நகரங்களில் வசிப்பது 5 முதல் 6 சிகரெட்டுகள் புகைப்பதன் விளைவினைத் தருகின்றது .புகை பிடிப்பவர்களுடன் வாழ்பவர்கள்  அல்லது அவர்களுடன் வேலை செய்பவர்கள் இப்போது அதன் தீயவிளைவுகளைப் பெரும் வாய்ப்புக்கு ஆளாகிறார்கள் .அவர்கள் இதய நோய்க்கும் ஆளாகிறார்கள். இவர்கள் மிதமாகப் புகைபிடிப்பவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

மனோதத்துவ ரீதியான மன உளைச்சலும், மன இறுக்கமும் அதிகமான புகைப்பிடித்தலை நாடிச் செல்லும்படி செய்கிற காரணிகள் என்பது தெரிந்த விஷயம். மேலும் அதற்கு அடிமையாக்கவும் செய்கிறது. பலர் ஒரு விதமான புகைப் பழக்கத்திலிருந்து மற்றொரு வகைக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது உதவாது. இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேற்கு வங்காளத்தில் புகைத்தல் செல்வந்தர்களுக்கும் கற்றவர்களுக்கும் உரிய பழக்கம் என்று கருதப்படுகிறது.

உலகம் முழுவதிலும் புகையிலை போடுவதையும், புகைத்தலையும் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் புகையிலைப் பழக்கமும்,  புகை பிடித்தலும் குறைந்து வருகிறது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்து வருவது ஆச்சரியத்தைத் தருகிறது. உலக சுகாதார அமைப்பு தடை செய்ய வேண்டியவற்றின் பட்டியலில் புகைத்தலை முதலாவதாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறது.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here