Home Infertility குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

470
0
SHARE

இனப்பெருக்க உறுப்புகள்
ஆணின் இனப்பெருக்க உறுப்புகள்
விரைகள்

ஒரு பெண்ணுக்கு பெண்மைத் தன்மையைத் தரும் ஆதாரமாக சினைப்பை எவ்வாறு
விளங்குகிறதோ, அத்தகைய ஆதாரமாக ஆணுக்கு விளங்குவது விரைகள். முகத்தில்
மீசை அரும்புவது, குரலில் மாற்றம், பாலின உணர்வு ஆகியவை ஓர் ஆண்
மகனுக்குத் தோன்றுவதற்கு இது முக்கியக் காரணம்.

தாயின் கருவிலுள்ள குழந்தையின் விரைகள் அதனுடைய விரைப்பையில் இருக்காது.
வயிற்றுக்குழிப் பகுதியில் இருக்கும். இவை மெதுவாகக் கீழிறங்கி குழந்தைப்
பிறப்பதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்புதான் விரைப்பையை அடையும்.
இதனால்தான் குறை மாதத்தில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு விரைப்பையில்
விரைகள் இல்லாமல், சில மாதங்களுக்குப் பிறகு வருகிறது.

விரை ஒவ்வொன்றும் ஒரு அங்குல அகலம், ஒன்னரை அங்குல நீளம், ஒரு அவுன்ஸ்
எடை கொண்டது. இதன் குறுக்களவு ஒன்னே கால் அங்குலமாகும்.

பல ஆண்களுக்கு இடப்பக்க விரையானது வலப்பக்க விரையை விட அதிக எடையுடன்
இருக்கும். இதனால் அந்தப் பக்கம் கொஞ்சம் தாழ்ந்து இருக்கும். இதற்கான
முக்கியக் காரணம் தெரியாது. ஆனால் நடக்கும்போது ஒன்றுடன் ஓன்று உரசாமல்
இருக்க இது உதவுகிறது.

வெப்பத்தின் காரணமாக விரைகள் உடலுக்கு வெளியே தொங்கியபடி இருந்தாலும்,
பயம், அச்சம் போன்ற சூழல்களில் உடலுடன் ஒட்டிய நிலைக்கு வந்துவிடும்.
உடலுறவின்போது விந்தணுக்கள் வெளிப்படும் சமயத்திலும் உடலுடன் ஒட்டியவாறு
அருகில் வரும்.

விரைகள் இரண்டு விதமான செயல்களை மேற்கொள்கின்றன. முதலாவது பருவ வயது
முதல் மனிதனின் இறப்பு வரை விந்தணுக்களை உற்பத்தி செய்வது, அடுத்தது,
ஆணின் செக்ஸ் ஹார்மோனான ஆன்ட்ரோஜெனை உற்பத்தி செய்வது.

ஒவ்வொரு விரையிலும் இருநூறுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு
அறையிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செமினி பெரஸ் டியூபுலஸ்
எனப்படுகிற விந்து நுண் குழாய்கள் உள்ளன. இக்குழாய்களில் தான்
விந்தணுக்களின் உற்பத்தி ஸ்தானம் உள்ளது. இந்த நுண் குழாய்கள்
வலைப்பின்னல் போன்ற மேலும் பல நுண்குழாய்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த
வலை பின்னல் குழாய்களுக்கு ரீட் டெஸ்டிஸ் என்று பெயர். இங்கு
விந்தணுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான திரவங்கள் சுரக்கின்றன. ரீட்
டெஸ்டிஸ் குழாய்கள் எஃப்பரண்ட் டக்ட்ஸ் என்கிற குழாய்களுடன் இணைகின்றன.
சுமார் எட்டு எஃப்பரண்ட் டக்ட்ஸ் குழாய்கள் சேர்ந்து ஒரு குழாயாக மாறும்.
இதற்கு எபிடிடைமிஸ் அல்லது விரை மேவி என்று பெயர்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here