Home Infertility குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

337
0
SHARE

இனப்பெருக்க உறுப்புகள்
ஆணின் இனப்பெருக்க உறுப்புகள்
விந்து ப்ராஸ்டேட்டும், விந்துப்பையும் சுரக்கும் பசை போன்ற திரவங்கள் இணைந்ததே விந்து. இவற்றோடு சிறுநீரகச் சுரப்பிகளின் பங்கும் இருக்கும். இது பாதி
திரவ நிலையிலும், பாதி கெட்டியாகவும், மொத்தத்தில் வழவழப்பாக இருக்கும்.

விந்தணு முட்டையை நோக்கி ஊர்ந்து செல்வதற்கு ஆற்றல் தரக்கூடியதாகவும், வெளியேறிய விந்தணு சுமார் முப்பது நிமிடத்திற்கு மேல் ஒரே நிலையில்
இருக்கவும் இந்த திரவம் உதவுகின்றன. இவை இரசாயன மாற்றத்திற்கு உட்பட்டு உருகுவதற்குள் விந்தணுவானது முட்டையோடு சேர்ந்தால் கருத்தரிப்பு நிகழும்.

விந்தணுக்கள்
பிறக்கும் முன்பே கருவில் உருவாகும் முட்டைகளைப் போல் இல்லாமல், பருவ வயதின்போது தான் விந்தணுக்கள் உருவாகின்றன. உடலில் மிகப் பெரிய செல்
முட்டை என்று கூறியிருக்கிறேன்; மிகச் சிறிய செல்கள் விந்தணுக்கள். ஏறக்குறைய ஏவுகணை போன்ற தோற்றத்தில் இவை இருக்கும்.

விந்தணு முட்டை வடிவத் தலையுடனும், உடல் பகுதியையும், நீண்ட வாலையும் கொண்டது. நாங்கள் ஏன் இதை ஏவுகணையோடு ஒப்பிட்டோம் என்றால், ஏவுகணையின் தலைப்பாகத்தில்தான் போர்தளவாடங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இதைப்போல இதன் தலைப் பகுதியில்தான் மரபணுக்களைக் கடத்தும் குரோமோசோம்கள் உள்ளன. இவைதான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைத்
தீர்மானிப்பவை.

பெண்ணின் முட்டையிலும் குரோமோசோம்கள் இருந்தாலும் அவை பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா என தீர்மானிக்காது. ஆணின் உயிரணுவிலுள்ள
குரோமோசோம்களே இவற்றைத் தீர்மானிக்கும்.

குரோமோசோம்களைக் கண்டறியும் முன்பு, கி.பி. 1978-ல் அந்தோணி வான் லீவன்ஹோக் என்பவர்தான் முதன்முதலாக பழைய மைக்ரோஸ்கோப் மூலம் விந்துவை
ஆராய்ந்து, அதில் விந்தணுக்கள் இருக்கின்றன, அவை நகருகின்றன என்று கூறினார். அதற்கு முன்பே 1667- ல் லூயிஸ் ஹாம் என்பவர் கொனேரியா நோய்தாக்கியவர்களின் விந்தணுக்களை மைக்ராஸ் கோப் மூலம் ஆராய்ந்து
தெரிவித்தார்.

வான் லீவன்ஹோக் தனது கண்டுபிடிப்பைப் பற்றி வெளியிட்ட போது, பலர் தாங்கள் விந்தில் மனித உருவமுள்ள உயிரணுக்களைக் கண்டதாகவும், அது ஆணா பெண்ணா
என்பதைக் கூட கண்டறிந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

தற்போது வந்துள்ள மைக்ரோஸ்கோப் மூலம் விந்தணுவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பதை
விந்தணுவின் தலைப்பாகமே தீர்மானிக்கிறது என்பதையும் அறிந்துகொள்கிறோம்.

விந்தணுவின் தலைப்பகுதியில் ஸ்கார்ப் அணிந்ததுபோல ஓர் அமைப்பு இருக்கும். இதை அக்ரோசோம் என்கிறார்கள். முட்டையைத் துளைக்கும்வரை இது கழலாது.
விந்தணுவின் உடல் பகுதி விவரிக்க இயலாத சிக்கலான அமைப்பை உடையது. விந்தணு
நீந்திச் செல்வதற்கான ஆற்றலைக் கொடுக்கக் கூடியது; விந்தணுவைக் கட்டுப்படுத்தக்கூடியது. அதன் வால் பகுதிதான் விந்தணு முன்னோக்கி ஊர்ந்துசெல்வதற்கான அசைவைக் கொடுக்கிறது.

முட்டையை நெருங்க நெருங்க வாலின் அசைவு அதிகமாக இருக்கும். இவ்வாறு அசைந்து செல்லும் உயிரணு, தான் புறப்பட்ட இடத்திலிருந்து வெளியேறிய பிறகு
சுமார் முப்பத்தெட்டு மணி நேரம்வரை உயிரோடு இருக்கும். ஆனால் அதன் மீது தண்ணீர் பட்டால் உடனே இறந்துவிடும். இதை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில்
வைத்து வருடக் கணக்கில் பாதுகாக்கலாம். அதன் பிறகும் அந்த அணுவால் கருத்தரிக்க இயலும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here