Home Women's Health பெண் – பாகம் 133

பெண் – பாகம் 133

511
0
SHARE

முட்டை வடிவ தலையுடனும் , தலையை போல 7 முதல் 15 மடங்கு பெரிய உடலும் கொண்டிருப்பது இயல்பான உயிரணு . பெரிய தலையும் , வித்தியாசமான வாலும் உள்ள உயிரணுக்கள் குறைபாடுள்ளவை. தரமான விந்தில் 60 விழுக்காடு உயிரணுக்கள் இருக்க வேண்டும்

ஆண்கள் சுமார் 40 விழுக்காடு அளவுக்கு இயல்புக்கு மாறான உயிரணுக்களை உற்பத்தி செய்கிறார்கள் . இது ஏன் என்பது தெரியவில்லை . தினமும் 10 முதல் 50 மில்லியன் புதிய அணுக்கள் உற்பத்தியாவதால் இத்தகைய குறைகள் இருப்பது இயல்பான ஒன்றுதான் . உலோக கம்பெனிகளில் வேலை செய்வோர் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் , புகை பழக்கம் உள்ளோர் ஆகியோருக்கு வால் சுருண்ட உயிரணுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன.

விந்தணுக்களின் நகரும் தன்மை குறைகிறது . விரைப்பை அதிக வெப்பமடைவதால் உயிரணுக்கள் சுருண்டு விடுகின்றன. காரணிகளிலிருந்து விலகினால் பாதிப்பின் அளவு குறையும். உயிரணுகுறையுள்ள பலரை அந்த சூழலில் இருந்து விலகியிருக்கவும், மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் . தினமும் ஆயிரம் மில்லிகிராம் வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும் . இதை தொடர்ந்து பின்பற்றுவோரின் விந்தணுவின் இயல்பு நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது .

வளர்ச்சியடையாத விந்தணுக்கள் தோன்றுவதற்கு விரைப்பையின் இறுக்கம் மற்றும் நோய்த்தொற்றுகளே முக்கிய காரணம் . விந்தில் வெள்ளை செல்கள் காணப்பட்டால் , நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் . பாலுறவின் மூலமாக தொற்று கிருமிகள் பரவ வாய்ப்பிருக்கிறது. கோனேரியா போன்ற நோய்க்கிருமிகள் மருந்துக்கு கட்டுப்பட்டாலும் , புராஸ்டேட் சுரப்பி தொற்றுகள் விரைவில் மருந்துக்கு கட்டுப்படுவதில்லை. ஒரு மாதத்திற்கு மேல் தொடந்து சிகிச்சை பெற்றால்தான் சரியாகிறது.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here