Home Infertility குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

866
0
SHARE

இனப்பெருக்க உறுப்புகள்
ஆணின் இனப்பெருக்க உறுப்புகள்
லிங்கம் அல்லது ஆண் குறி

சிறுநீர் கழிக்கும் உறுப்பாக மட்டுமின்றி, ஆணிடமிருந்து பெண்ணுக்கு விந்தணுவை தொடர்பு சாதனமாகவும் இது பயன்படுகிறது. சாதாரணமாக சுருங்கிய
நிலையில் காணப்படும் இந்த உறுப்பு உடலுறவின் போது பருத்து, விறைப்பாகிப் புடைத்தெழும். நீளமான இரு தசைகளாலும், நரம்பாலும் ஆனது.

உடலுறவின் உச்சக்கட்டத்தில் இந்தத் தசையின் அடிப்பகுதியில் ஏற்படும் முரட்டுத்தனமான செயலால் விந்து வேகமாக வெளியில் பீய்ச்சியடிக்கப்படும்.
சில நேரங்களில் அரிதாக, இந்த தசைகள் சரியாக இயங்காவிட்டால் மலட்டுத் தன்மை ஏற்படும்.

பொதுவாக, ஒவ்வொரு முறையும் ஒன்னரை டீஸ்பூன் அளவுக்கு, ஓன்று முதல் எட்டு
மில்லி லிட்டர் (டீஸ்பூனின் சராசரி கொள்ளளவு மூன்று மில்லி லிட்டர்) விந்து வெளியாகவேண்டும். அப்போதுதான் உயிரணுக்கள் எடுத்துச் செல்லப்பட்டு
கருத்தரிப்பு நிகழும். இதைவிடக் குறைந்தால் அந்த நபர் கருத்தரிப்பு செய்யும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும்.

ஆண் குறி எல்லோருக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. இதன் நீளம், பருமன் என அகலத்தில் வித்தியாசப்படும். சிலருக்கு ஆண் உறுப்புகள் மிக நீளமாக
இருந்தால்தான் உடலுறவு கொள்ள இயலும் என நினைக்கிறார்கள், அது உண்மையல்ல.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here