Home Women's Health குழந்தை வளர்ப்பு – பாகம் 16

குழந்தை வளர்ப்பு – பாகம் 16

381
0
SHARE
Mum playing with little child in the sofa

குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் எனபதை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை . போதுமான அளவு பால் குடித்ததும் குழந்தை தானாகவே குடிப்பதை நிறுத்தி கொள்ளும் . அதன் பிறகு பாட்டிலை அகற்றி குழந்தையின் வாயை துடையுங்கள் . பாட்டிலையும் கையோடு சுத்தப்படுத்துங்கள் . குழந்தையை தோள் மீது கிடத்தி அல்லது மடியில் நேராக உட்கார வைத்து மெதுவாக அதன் முதுகில் தட்டி கொடுங்கள். குழந்தை ஏப்பம் விடட்டும்.

பால் கொடுத்த பிறகு குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா ? வேண்டாமா ? என சில தாய்மார்கள் கேட்கிறார்கள். பொதுவாக பார்முலா உணவுகளில் உப்பு , புரதம், கார்போஹைட்ரேட்டுக்கள் போன்ற அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் என்பதால் பால்
மட்டுமே போதுமானது. ஆனால் காய்ச்சலுடனோ அல்லது வெயில் காலமாகவோ இருந்தால் குழந்தைக்கு நாவறட்சி ஏற்படும் . இதனால் அவ்வப்போது தண்ணீர் கொடுப்பது நல்லது.

பாட்டில் பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி மலசிக்கல் ஏற்படும். குறைவாக பால் குடிக்கும் குழந்தைக்கும் மலசிக்கல் வரும் . இதை தவிர்ப்பதற்கு குழந்தைக்கு சரியான விகிதத்தில் பால் புகட்டுவது, போதுமான தண்ணீர் புகட்டுவது நல்லது . குழந்தை நான்கு வாரத்திற்கு மேற்பட்டதாக இருந்தால் பழச்சாறுகள் , வெந்நீர் போன்றவற்றை கொடுக்கலாம். அல்லது மருத்துவரை பார்க்க வேண்டும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here