Home Women's Health குழந்தை வளர்ப்பு – பாகம் -18

குழந்தை வளர்ப்பு – பாகம் -18

343
0
SHARE

குழந்தைக்கு உணவூட்ட விரும்புவோர் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை மாட்டுப்பால் கொடுக்க கூடாது . அதன் பிறகு வேண்டுமானால் உணவில் மாட்டுப்பாலை சேர்த்து கொள்ளலாம். எருமை பால் வேண்டவே வேண்டாம். முட்டை சேர்த்து கொள்ளலாம் . கோதுமை பண்டங்களை தரலாம் .

ஒன்பது முதல் 12 மாத குழந்தைக்கு பட்டாணி , பீன்ஸ் , பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றை நன்றாக வேகவைத்து மசித்து கொடுக்கலாம் . குழந்தைக்கான உணவை மூன்று வேளையும் தரலாம்.

குழந்தைக்கு 2 வயது ஆகும்வரை எந்தவிதமான கொட்டைகளையம் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது . முழு தானியங்களை ஐந்து வயதுவரை கொடுக்கக்கூடாது . தேனை ஒரு ஆண்டு நிறையும் முன்பு தர கூடாது . வேகவைத்த முட்டை மற்றும் கோதுமை பொருட்களை ஆறு மாதம் வரை தர கூடாது . பால், சிறு தானியங்கள் போன்றவற்றை குழந்தைக்கு ஐந்து மாதம் முடியும் முன்பு தர கூடாது . குழந்தைக்கு ஆஸ்துமா , எக்சிமா போன்றவை இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை மீன் , கோதுமை , மாட்டுப்பால் போன்றவற்றை தராமல் தவிர்க்க வேண்டும் .

குழந்தைக்கு உப்பு போட்டு தரவேண்டும் , சர்க்கரைபோட்டு உணவூட்ட வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை கேட்காதீர்கள் . குழந்தைக்கு சத்தான உணவுதான் தேவையே தவிர ருசியான உணவு தேவையில்லை .

குழந்தை திட உணவை சில சமயம் எடுக்காது. பொதுவாக பசியாக இருந்தால் திட உணவு அதை உடனே திருப்தி படுத்தாது . இதனால் பாலைத்தான் விரும்பும் . சில உணவை விரும்பாவிட்டாலும் , சரியான முறையில் குழந்தைக்கு உணவை தராவிட்டாலும் , சரியான வெப்ப
பததில் உணவை தராவிட்டாலும் குழந்தை திட உணவை சாப்பிட மறுக்கலாம் . இப்படிப்பட்ட நிலையில் உணவை சரியாக முறையாக செய்திருக்கிறீர்களா என்பதை சரிபார்த்து கொண்டு குழந்தைக்கு பாலுட்ட வேண்டும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here