Home Women Part குழந்தைப் பராமரிப்பு

குழந்தைப் பராமரிப்பு

197
0
SHARE

குழந்தைக்கு சிறந்த உணவு தாய்ப்பால் தான் என்பதை தாய்க்கு உணர வைக்கவும். குழந்தை எப்போதும் தாயுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டு கதகதப்பாக இருக்கும். தாயிடம் குழந்தையை எப்போதும் சுத்தமாகவும், கதகதப்பாகவும் வைத்துக் கொள்ளச் சொல்லவும். குழந்தை விரும்பும் போதெல்லாம் தாய்ப்பாலைக் குடிக்கச் செய்ய வேண்டும்.

பிறந்த முதல் வாரங்களில் குழந்தையின் கண்ணிலிருந்து மஞ்சளாய் ஊளை வந்துக் கொண்டிருக்கும். அதை தாய்ப்பாலைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். அல்லது குளிர்ந்த கொதி நீர் கொண்டும். சுத்தமான துணிக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். குழந்தையின் கண்கள் வீங்கி சிவந்து அதிக ஊளை இருந்தால் மருத்துவரிடம் காட்டுவது நல்லது.

தொப்புள் கொடியை பராமரிப்பது

குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்பட்ட இடத்தை சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். குழந்தைக்கு ஒவ்வொரு முறை அடித்துணி மாற்றும் போதும், தொப்புள் கோடியை ஆல்கஹால் மற்றும் சுத்தமான துணிக் கொண்டு சுத்தம் படுத்தவும் முதல் வாரத்தில் தொப்புள் கொடி கறுத்து தானாக விழுந்து விடும். ஈ மற்றும் அழுக்கு படியாது இருக்குமானால், அதை எதனாலும் மூட வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி இல்லாதபட்சத்தில், மெல்லிய சுத்தமான துணியால் அழுத்தமில்லாமல் மூடுவது நல்லது.

தொப்புள் கொடியை சுற்றி சிவந்தோ, சீழோ இருந்தால் நோய்க் கிருமி தாக்கியுள்ளது என்று அர்த்தம். மருத்துவரிடம் உடனடியாக காண்பித்து, நோய்கிருமிகளுக்கு எதிரான மருந்து தரப்பட வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு டெட்டனஸ்
பிறந்த குழந்தைக்கு டெட்டனஸ்கான அடையாளங்கள்
காய்ச்சல்
குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்
குழந்தை உடல் விறைத்துப் போகும்
தாய்ப்பால் குடிக்க குழந்தை கஷ்டப்படும்
வேகமாக மூச்சு வாங்கும்

செய்ய வேண்டியவை
குழந்தையை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகுமெனில் குழந்தைக்கு 100000 யூனிட் பென்சில் பென்சிலின் ஊசி மருந்தை தர வேண்டும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here