Home Common Health Problems மூளைக்காய்ச்சல்

    மூளைக்காய்ச்சல்

    219
    0
    SHARE

    து கொசுவால் பரப்பப்படும் ஒரு வைரஸ் நோய் . இது குரூப் பி ஆர்போவைரஸால் உண்டாக்கப்பட்டு கியூலிசின் வகை கொசுக்களால் பரப்பப்படுகிறது. இது முக்கியமாக விலங்குகளைத் தாக்கும் நோய், மனிதர்களைத் தற்செயலாகப் பாதிக்கிறது. குரூப் பி ஆர்போவைரஸ் மனிதரில்லாத, விலங்குகள், பறவைகள் போன்றவற்றில் தொற்று ஏற்படுத்துகிறது. தொற்றுக்குள்ளான கொசு கடிக்கும் போது மனிதருக்கும் நோய் பரப்பப்படுகிறது. மனிதன் தற்செயலாகத்தான் பாதிக்கப்படுகிறான். மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுவதற்கான பதிவுகள் எதுவும் இதுவரை இல்லை.

    இந்த வைரஸ்களை வளரவிடும் விலங்குகளில் பன்றி தான் வைரஸை வளரவைத்துக் கொசுக்களுக்குப் பரப்பக்கூடிய முதுகெலும்புள்ள விலங்கு. கொசுக்கள் வைரஸை மனிதனுக்குப் பரப்புகின்றன. பன்றி இந்த வைரஸ்களைப் பெருக வைக்கும் விலங்காகக் கருதப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பன்றிகள் இருக்கும் இடங்களில் ஆபத்து அதிகமாகிறது. கிராமப்பகுதிகளில் வாழும், அடிமட்டத்திலிருக்கும் மக்களிடம் இந்நோய் அதிகமாக உள்ளது.

    கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யச் சாதகமான பருவமழைக் காலம் அல்லது அதற்குப் பிந்தையகாலம் போன்ற சூழலில் இந்நோய் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. நோய்பரப்பும் கொசுக்களின் அடர்த்தியை இச்சூழ்நிலை அதிகப்படுத்துகிறது.

    அறிகுறிகள்

    காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு 6 மணி நேரத்திற்குமேல் தொடர்ந்திருக்கும் பிதற்றல் மாற்றம்

    சிகிச்சை
    இந்நோய்க்குக் குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் கிடையாது. தொடக்கத்திலேயே நோயைக் கண்டுபிடித்து சரியான மருத்துவ பராமரிப்பு கொடுப்பது அவர்களின் உயிரைக் காக்கும்.
    பெருமளவில் இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு நோய் பொதுவாக காணப்படும் இடங்களிலுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது ஒரு வழியாகும்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here