Home Infertility குழந்தைப்பேறு

குழந்தைப்பேறு

248
0
SHARE

சில கருவாக்கத் தடைகள்
டுத் திசுக்கள் மீண்டும் வருவதைத் தடுத்தல்
அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமான கருவாக்கத்தை உண்டாக்குவதற்கு, நோய்த் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்தல், உறுப்புகள் சிதைவதைத்
தடுத்தல், அதிக ரத்தச் சேதம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்றவை முக்கியக்
காரணங்களாகும்.

மைக்ரோ சர்ஜரி செய்யும்போது, பாதிப்பின் தன்மைகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. மைக்ரோ சர்ஜரி செய்யும்போது ரத்தப் போக்கு, ரத்தம் உறைதல் ஆகியவை தடுக்கப்படுவதோடு, புதிய அறுவையால் வடுக்கள் வராமலும்
தடுக்கப்படுகிறது.

அறுவைச் சிகிச்சையின்போது, மிகச்சிறிய ரத்த நாளத்தில் இருந்து ரத்தம் வருவதையும் தடுப்பதற்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வடுக்கள்
ஏற்படாமல் தடுக்கும் பொருள்களால், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பகுதி மூடப்படுவதால் வடுக்கள் ஏற்படாது.

சில மருத்துவர்கள், மைக்ரோ சர்ஜரி செய்யப்பட்ட ஆறாவது வாரத்துக்குப் பிறகு லேபராஸ்கோப் சிகிச்சை செய்கிறார்கள். ஏதேனும், வடுக்கள் தோன்றியிருந்தால் அப்போது அதைச் சுத்தப்படுத்தி விடுவார்கள்.

பெண்ணின் வயது, சிகிச்சையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, சிகிச்சை முறையைத் தீர்மானிப்பது தான் வழக்கம்.

புற கர்ப்பம் தோன்றுவதற்கான காரணங்கள், அதற்கான சாத்தியக்கூறுகள், புற கர்ப்பம் வராமல் தடுப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது
போன்ற தகவல்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால் போதும். எந்தச் சூழலிலும் புற கர்ப்பம் வருவதைத் தடுத்துவிடலாம்.

ஒருவேளை, புற கர்ப்பம் ஏற்பட்டுவிட்டாலும், அதை எளிதில் நீக்கி தாயைக் காப்பாற்றுவதோடு, அடுத்த சில மாதங்களிலேயே ஒரு அழகான குழந்தை
பிறப்பதற்கான அடித்தளத்தையும் போட்டுவிடலாம்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here