Home Women Part பெண் – பாகம் 141

பெண் – பாகம் 141

302
0
SHARE

பெண்களுக்கான சிகிச்சைகள் அனைத்துமே கரு முட்டையை மையமாக கொண்டிருக்கின்றன. கருப்பை சார்ந்த பிரிச்சினையாக இருந்தாலும் ,சினைப்பை சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் மாதவிலக்கு பிரச்சினையாக இருந்தாலும் ஹார்மோன் பிரச்சினையாக இருந்தாலும் அனைத்தும் கருமுட்டையை சுற்றியே அமைந்துள்ளன.

முட்டை வெளியாகிறதா இல்லையா என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் அறிந்து ஹார்மோன் சிகிச்சையளித்து முட்டை வெளியாவதை தூண்டலாம் . இதற்கு முன்பாக கருப்பை சினைப்பை கருக்குழாய் ஆகிய உறுப்புகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை சரிசெய்துவிட வேண்டும்.

ஹார்மோன் சிகிச்சையின் போது பிட்யூட்டரி சுரப்பி எவ்வளவு நேர இடைவெளியில் எப் .எஸ்.எச் மற்றும் எல்.எச் ஹார்மோன்களை வெளியிடுகிறது என்பதை கண்காணித்து அதே கால அளவில் செயற்கையாக தூண்டினால் கருமுட்டை வெளியாகும் . ஹைபோதலாமஸ் செயல் திறன் குறைவினால் கருமுட்டை வெளியாவது தடைபட்டாலும் இவ்வாறே ஹார்மோன் சிகிச்சையின் மூலம் தூண்டினால் முட்டை வெளியாகும்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை செயலிழக்க செய்வதற்கு முதலில் பிட்யூட்டரியை செயல் இழக்க செய்ய மருந்துகளை அளித்து சிகிச்சை தரலாம் . இதன் பிறகு ஹியூமன் மெனோபாசல் கொனடோட்ரோபின் ஹார்மோனை ஊசி வழியாக செலுத்தி சினைப்பையை தூண்டி பல முட்டைகளை வெளியிட வைக்கலாம்.

புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன் சரியாக சுரக்காவிட்டால் கருப்பையின் உள்வரிசவ்வு போதுமான அளவு வளர்ச்சியடைந்திராது . இது முட்டையை ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைந்துவிடும் . இதை சரி செய்வதற்கு புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோனை செயற்கையாக தந்து முட்டையை வெளியிட வைக்கலாம் . புரோலாக்டின் அதிகமாக இருந்தால் மலட்டு தன்மை தவிர கண்பார்வை பாதிப்பும் ஏற்படும் . இவற்றை முதலில் நீக்கிவிட்டு சிகிச்சையளிக்கலாம்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here