Home Infertility குழந்தைப்பேறு

குழந்தைப்பேறு

504
0
SHARE

சில கருவாக்க தடைகள்
கருப்பை உள்வரிச் சவ்வு வளர்ச்சி

னது காதல் கணவனைக் கரம் பிடித்து, இத்தனை மாதங்களாக, ஆண்டுகளாக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்த முதலிரவை, இன்பமாக எதிர்கொள்ள இருந்த நேரத்தில், தாம்பத்ய உறவு எனக்குத் துன்பமாகவே இருந்தது. கடுமையான வலியால் துடித்தேன்.

முதல் நாள் இப்படித்தான் வலியாக இருக்கும் என, மனமான என் தோழி கூறியிருந்ததால், அதைச் சகித்துக்கொண்டேன். இப்படியே, அடுத்த இரண்டு நாள்களும் தாங்க முடியாத வலியால் துடித்தேன்.

அடுத்த நாளில் இருந்து, இரவு வந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. நாசுக்காக எனது தங்கை, தம்பிகள் என, குடும்பத்தினரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டேன். மறுநாளும் இதே பயம் என்னைத் தொற்றிக் கொண்டதால், எனது கணவரின் ஆசைக்கு இணங்க முடியாத நிலைக்கும், அதை வெளியே சொல்ல முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டேன்.

எங்களுக்குள் பூசல் வர ஆரம்பித்ததை உணர்ந்து, ஏன் என்ன என்று என் தாயார் குடைய ஆரம்பித்துவிட்டார். நான் அனுபவிக்கும் வேதனைகளை, அவரிடம் மெதுவாகத் தெரிவித்தேன்.

திருமணத்துக்கு முன், மாதவிலக்கு வலியாலும், அடிவயிற்று வலியாலும் தவிப்பதை உணர்ந்திருந்த எனது தாயார், நான் இப்படிச் சொன்ன மறுநாளே, ஒரு மகளிர் மருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றார்.

அங்கே பரிசோதித்தபோது, எனது இடது பக்கச் சினைப்பை, இயல்பு நிலையைவிட இரண்டு மடங்கு பெரிதாக வளர்ந்திருப்பதாக டாக்டர் சொன்னார். கருப்பையின் பின்பக்கத்தில், சிறிய வீக்கம் இருப்பதைப்போலவும், லேபராஸ்கோப் செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது, எதனால்? இந்தப் பிரச்னையை, லேபராஸ்கோப்பியால் தீர்க்க முடியுமா? எனது திருமண வாழ்க்கை இனிமையாக அமையுமா?’ என்பதே அந்தக் கடிதத்தின் சாரம்.

கடிதத்தைப் படித்ததுமே, இது கருப்பையின் உள்வரிச் சவ்வு வளர்ச்சியால் வந்த பிரச்னை என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தப் பெண்ணுக்கு பதில் கடிதம் எழுதினேன்.

அவரோ, ஊரில் இருந்து நேராக மருத்துவமனைக்கு வந்து, நீங்களே சிகிச்சை அளியுங்கள் என்று சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.

சிகிச்சை முடிந்து நான்கு மாதம் கழித்து, அவர் தொலைபேசியில் பேசும்போது, ‘தேங்க்ஸ் டாக்டர்…” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

‘என்னம்மா விஷயம்?’ என்றபோது,

‘நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்றார்.

திருமணத்துக்கு முன்பாகவே, பல பெண்கள் மாதவிலக்கு வலியால் துடிப்பதும், மருத்துவப் பரிசோதனையில், கருப்பையில் சதை வளர்ந்திருக்கிறது என்பதற்காக, அறுவைச் சிகிச்சை செய்வதும் தற்போது சகஜமாகி வருகிறது. இந்தச் சிகிச்சை முடிந்தால்தான், இனிமையான தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும் என்ற நிலையை, அந்தப் பாதிப்பு கொண்டு வந்து விட்டிருக்கிறது.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here