Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 19

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 19

314
0
SHARE

குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்
குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (ஜி.டி.டி) என்கிற பரிசோதனை செய்து முதலில் சர்க்கரை இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்கள். வெறும் வயிற்றில் இரத்தத்தை எடுத்துப் பரிசோதிப்பது, பரிசோதனைக்குச் சென்றதும் உடனடியாக சுமார் 75 கிராம் குளுக்கோஸ் தண்ணீரில் கலந்து
குடிக்கக் கொடுத்து ஒரு மணி நேரம் கழித்து பரிசோதிப்பது. அடுத்த ஒரு மணி நேரம் கழித்து பரிசோதிப்பது.
இந்த மூன்று கட்டங்களையும் இரன்டு மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள். இந்த பரிசோதனை மிகவும் நம்பகமானது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதை துல்லியமாகக் காட்டிவிடும். வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் தெரிவித்துவிடும்.

பரிசோதனையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு இரத்த சர்க்கரை அளவு 140-க்கு மேல் அதிகமாக இருந்தால் இன்சுலின் சுரந்தாலும் அது முழுமையாக வேலை செய்யாது.

இதனால் கல்லீரலால் கொழுப்பை சரியாகப் பிரிக்க முடியாத நிலையம், தொடர்ந்து கொழுப்பு சேர்ந்து இரத்த நாளச் சுவர்களில் படிவதும் ஏற்படும்.

நாளடைவில் இதயநோய், மாரடைப்பு, இரத்த நாளச் சிதைவுகள், இரத்தக் கொழுப்பு போன்றவை வரும்.

மாத்திரை எடுத்துவந்தாலும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது ஏன்?
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைப் பொறுத்து இவ்வாறு தேவைப்படலாம். உங்கள் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 150 என்றும், மாத்திரையும், உணவும் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 250 மில்லிகிராம் என்றும் இரத்த சர்க்கரை அளவு இருந்தால் கண்டிப்பாக ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். நன்றாக ஓடி ஆடி வேலை செய்யுங்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

சர்க்கரை மயமாக்கப்பட்ட இரத்த சிவப்பணு பரிசோதனை
இது ஒரு நவீன பரிசோதனை முறை . இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள இரும்புப் புரதம் ()சர்க்கரையுடன் இணைந்து நிரந்தர மாற்றத்திற்குள்ளாகிறது. அந்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் வரை அதாவது சுமார் 120 நாள்களுக்கு இந்த மாற்றம் நாம் உட்கொள்ளும் உணவாலோ, மருந்துகளாலோ, உடற்பயிற்சியாலோ வேறுவிதமாக மாறாமல், மறையாமல் அப்படியே இரத்தத்தில் இருக்கும். இதை வைத்து சர்க்கரையை கண்டறியலாம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here