Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 71

உறவுகள் சிறகுகள் – பாகம் – 71

366
0
SHARE

பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல்.. கொடுமையான குண்டு வெடிப்புச் சம்பவம்.

தற வைக்கிற பாலியல் வன்கொடுமை…

குலை நடுங்கச் செய்கிற கொலை,கொள்ளை…
இப்படி வாழ்க்கையில் ஒரு பேரிடரை சந்திக்கும் போது எப்படி உணர்விர்கள் ? வாழ்க்கையில் மிகப் பெரிய எதையோ பறிகொடுத்த மாதிரியும், வாழ்வதற்கு அர்த்தமே இல்லாதது போலவும், எல்லாமே அழிந்தது போலவும் இருக்கும்தானே ? அதே போன்ற தொரு உணர்வைத்தான் துணையின் தகாத உறவு பற்றிய உண்மையும் கொடுக்கும் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்,துணைக்குத் தன்னைத் தாண்டி வேறொருவருடன் தகாத உறவு இருப்பதைக் கண்டுபிடித்த யாரும் இத்தகைய உணர்வுகளை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள்.

திருமணம் என்கிற பந்தத்தில் ‘ இனி எல்லாம் சுகமே …’ என்கிற நம்பிக்கையுடன் நுழைந்திருப்பார்கள். துணைக்குத் தப்பான உறவு இருப்பது தெரிந்தாலும். அந்த நம்பிக்கை தளர்ந்து, ‘தான் யார்… தனக்கான இடமென்ன? தான் அந்த உறவுக்குத் தகுதியானவர் தானா ? தன்னை ஏன் தன் துணை ஏமாற்ற வேண்டும் ?’ என ஏராளமான கேள்விகள் எழும். இப்படிப்பட்ட மனநிலையை ‘போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ் ஆர்டர் ‘ ( PTSD ) என்கிறார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது. அதீத மன அழுத்தம் இருக்கும். நடந்த விஷயங்களைப் பற்றியே மறுபடி மறுபடி நினைக்கத் தோன்றும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. பதற்றமும் பயமும் அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு துணையின் தகாத உறவைக் கண்டுபிடிக்க அவரது அறைக்குள் நுழைந்திருப்பீர்கள். அவரது கம்ப்யுட்டரிலோ, செல்போனிலோ அவர் தகாத உறவு வைத்திருக்கிற அந்த நபரின் மெசேஜ் அல்லது படங்களைப் பார்த்து அதிர்ச்சி யடைந்திருப்பீர்கள். அந்த உறவு நிரூபிக்கப்பட்டதும், எப்போது அந்த அறையைப் பார்த்தாலும் உங்களை அறியாத ஒரு பயம் பீடிக்கும்.

அந்த அறைக்குள் நுழைவதையே தவிர்ப்பீர்கள். இப்படி சில மனிதர்கள், சில இடங்கள் கூட உங்கள் உணர்வுகளுடன் சேர்ந்து பழக்கப்படுத்தும்.

ஆங்கிலத்தில் ‘ஃப்ளாஷ் பல்பு மெமரி’ என்போம். நடந்த சம்பவங்களே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து துன்புறுத்தும். அது ஒருவிதமான அசவுகர்ய மனநிலையைத் தரும். இதயத் துடிப்பை அதிகரிக்கும். மூச்சுத்திணறலை உண்டாகும். வியர்த்துக் கொட்டும். அடிவயிற்றைப் பிசைகிற உணர்வை உருவாக்கும்.

மனநிலையில் மோசமான ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். திடீரென சிரிப்பதும்,அடுத்த சில நிமிடங்களில் கதறி முழுவதுமான அந்த உணர்வு கிட்டத்தட்ட ‘பைபோலார் டிஸ்ஆர்டர் ‘அறிகுறிகளைப் போன்றது.

துணையின் தகாத உறவு உறுதி செய்யப்பட்டதும், மனநிலையில் மரத்துப்போன ஒரு தன்மை ஏற்படுவது உண்டு. அப்படியொரு சம்பவம் நடப்பதற்கு முன்பு, ரசித்த,நேசித்த, விரும்பிய பல விஷயங்கள், அது உணவாகட்டும், கேளிக்கைகளாகட்டும், மனிதர்களாகட்டும் – எல்லாமே வெறுப்புக்குரியவையாக மாறும். குடும்ப நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்கச் செய்யும். கடுமையான அதிர்ச்சியைச் சந்தித்த ஒருவருக்குத் தேவைப்படுகிற ஆதரவை இவர்களுக்கு குடும்பத்தார் அளிக்க வேண்டும். நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் மனக்கலக்கம் அதிகமாகும். தனது துணை, உறவு சரியாகுமா ? குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்? என்றெல்லாம் எண்ணத் தோன்றும். வாழ்க்கையின் மிகப்பெரிய பிடிப்பையே இழந்ததுபோல இருக்கும். ஞாபக மறதி அதிகமாகும். இப்படிப்பட்ட சித்ரவதைகளை அனுபவிக்கிறவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் ஓரளவு பலனளிக்கும். தூக்கம் வரவும் பதற்றம் தணிக்கவும் சில மருந்துகள் உதவும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here