Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 73

உறவுகள் சிறகுகள் – பாகம் – 73

353
0
SHARE

லி என்பது தவிர்க்க முடியாதது. அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்’ என்கிறதொரு ஆங்கிலப் பொன்மொழி. வலியைக் கொடுக்கும் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் இந்தத் தத்துவம் பொருந்தும். திருமணம் தாண்டிய உறவுப் பிரச்னைக்கும் இதுவே விதி.

மன்னிப்பதா, தண்டிப்பதா என்பது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வரின் தனிப்பட்ட முடிவு. அதற்கு முன்பாக இந்த சிக்கலான பிரச்னையிலிருந்து மீள சில வழிகளை முயற்சி செய்யலாம்.
நம்பிக்கையை மறுபடி கட்டமைப்பது முதல் சவால்.

பிரச்னைக்கு முன்பு இருவரும் எப்படி இருந்தீர்களோ… போகட்டும். இப்படியொரு மாபெரும் பிரச்னையை சந்தித்து, அதிலிருந்து மீள நினைப்பவர்கள், அதன் பிறகாவது ஒருவருக்கொருவர் வாழ்க்கையை ரகசியங்கள் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

என்னதான் பிரச்னையை சரிசெய்ய நினைத்தாலும், சரி செய்து விட்டுப் புது வாழ்க்கையைத் தொடங்க முயற்சித்தாலும், தவறு செய்த துணையின் ஒவ்வொரு நடவடிக்கையும் கொஞ்ச நாளைக்குச் சந்தேகத்தையே தரும். அதைத் தவிர்க்க முடியாது என்றாலும் மிக மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

தவறுக்கு மன்னிப்பு கேட்கிற பழக்கம் நம்மூர் கணவன் – மனைவியிடம் ரொம்பவே குறைவு. மன்னிப்பு கேட்பதை மிகப் பெரிய மானக்கேடாக நினைப்பதால்தான் சின்ன பிரச்னை கூட பிரிவு வரை இட்டுச் செல்கிறது. தகாத உறவுக்குள் சிக்கி மீண்ட துணையானவர், தன் இணையிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டியது இந்த விஷயத்தில் மிகமிக முக்கியம். அப்படிக்கேட்கப் படுகிற மன்னிப்பு வெறும் வார்த்தை அளவில் வெளிப்படக் கூடாது. மனதில் ஆழத்திலிருந்து கேட்கப்பட வேண்டும்.

துணையைத் தாண்டிய இன்னொருவருடன் உறவு கொள்வது என்பதொன்றும் கிரிமினல் குற்றமில்லைதான். ஆனாலும், அத்தகைய உறவைத் தகாதது என்றுதான் எல்லா மதங்களுமே போதிக்கின்றன. கடவுளுக்கு எதிரான செயலாகச் சொல்கின்றன. கணவன் அல்லது மனைவியின் நம்பிக்கையை வேரோடு கிள்ளப் போடுகிற வகையில் அமைகிற இந்த உறவு பாதிக்கப்பட்டவரின் பார்வையில் படுபாதகமான செயல் என்பதில் சந்தேகமே இல்லை.
பிரச்னையைப் பேசி முடித்து, முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது… அத்துடன் எல்லாம் சரியானது என சகஜமாக வேண்டாம். அப்படி யொரு உறவில் சிக்கியதற்காகவும் துணையை ஏமாற்றியதற்காகவும் தான் எந்தளவுக்கு வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம் என்பதை துணையிடம் வெளிப்டையாகச் சொல்ல வேண்டும். திருமணம் தாண்டிய அந்த உறவு இவர்களின் தாம்பத்திய வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழித்தது என்பதையும் இருவரும் பேசிப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட துணையின் வலியை தானும் அப்படியே உணர்ந்த கதையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளலாம். தான் தகாத உறவில் சிக்கி இறந்தவரை, கணவன் அல்லது மனைவியின் மனநிலையில் ஏற்பட்ட உணர்ச்சிப் போராட்டங்களை தானும் அனுபவித்ததை சொல்லி மன்னிப்பு கேட்கலாம்.

இனி வரும் காலங்களில் துணையுடன் செலவிடுகிற நேரத்தை அதிகப்படுத்த வேண்டியதும் அவசியம். வெறுமனே உடன் இருப்பதைவிடவும், துணையின் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பது. கட்டி அணைப்பது, இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசுவது, உணவு சாப்பிடுவது என சின்னச் சின்ன விஷயங்களில் கூட அன்பைக் கட்டலாம். அதே நேரத்தில் துணைக்கு தனிமை தேவை எனத் தெரிந்தால் அதை அனுமதிக்கவும் தயங்க வேண்டாம்.

தான் இப்படியொரு தகாத உறவு சிக்கத் தவிக்க தன் துணை தான் கரணம் என்றோ, வேறு விஷயங்களின் மீதோ பழியைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். நடந்த எல்லாவற்றுக்கும் தானே காரணம் எனப் பிரச்னைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னால் மனம் வருந்திய துணைக்கு அன்பளிப்புகள் கொடுத்ததும் அன்பான வார்த்தைகள் சொல்லியும் மீண்டும் மீண்டும் ஆறுதல் தேடலாம், தவறில்லை.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here