Home Common Health Problems கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

    கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

    239
    0
    SHARE

    டுமையான காய்ச்சல் ஏற்பட்டால் அது மிக பெரிய நோயின் அறிகுறியாகும். அவ்வாறு ஏற்பட்டால் காய்ச்சலைத் தணிக்க முயற்சி செய்யுங்கள். சிறு குழந்தைகள் விஷயத்தில் கடுமையான காய்ச்சல் மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

    காய்ச்சல் மிக அதிகமானால் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

    உடம்பில் தண்ணீர் தெளிக்கவும். காற்று கிடைக்கும்படி விசிறிவிடவும். மெல்லிய துணி கொண்டு மார்பை மூடவும். சிறிய துணைகளைக் குளிர்ந்த நீரில் நனைத்து அவற்றை மீது காற்று படும்படி விசிறவும்.

    குளிர்ச்சியாக இருக்கும் பொருட்டு அவற்றை அடிக்கடி மாற்றவும். 104 டெகிரீக்கு கீழ் காய்ச்சல் இறங்கும் வரை தொடர்ந்து இவ்வாறு செய்யவும். ஐஸ் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். இது நடுக்கத்தை ஏற்படுத்திக் காய்ச்சலை ஆதிக்கப்படுத்தி விடலாம்.

    காய்ச்சலால் சக்தியும் நீர்ச்சத்தும் அதிகமாக விரயமாகின்றன. நோயாளி தெம்போடு இருப்பதற்கு சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த குளிர்ந்த நீரைக் கொடுக்கவும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கொதிக்க வைத்து ஆரிய தண்ணீரைக் கொடுக்கவும்.

    காய்ச்சல் தணிய குழந்தைகளுக்கு பாரசிட்டமால் இனிப்பு மருந்து பயனுள்ளது. இல்லாவிட்டால் பெரியவர்களுக்கான பாரசிட்டமால் மாத்திரைகளை கீழ்கண்ட அளவில் கொடுக்கலாம்.

    மருந்தளவு

    12 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை
    7 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 6 மணி நேரத்திற்கு அரை மாத்திரை, உணவுக்குப்பின் சாப்பிட வேண்டும்.
    3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை கால் மாத்திரை உணவுக்குப்பின் சாப்பிட வேண்டும்.
    1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை கால் மாத்திரை உணவுக்குப்பின் சாப்பிட வேண்டும்.

    சிறிய கை குழந்தைகள் ஆடையின்றி வெறும் உடம்புடன் இருந்தாலே காய்ச்சல்
    தணிந்துவிட வாய்ப்பு உண்டு. பாரசிட்டமால் இனிப்பு மருந்து அரைத் கரண்டி 6 மணிநேரத்திற்கு ஒருமுறை தரலாம்.
    காய்ச்சல் உள்ளவர்கள் மாத்திரையை விழுங்க முடியாவிட்டால், அதைப் பொடிசெய்து கொஞ்சம் தண்ணீரில் கலந்து குதத்தின் வழியாக எனிமாவாகச் செலுத்தலாம். அல்லது ஊசியை எடுத்துவிட்டு ஊசிக்குழல் மூலமாகக் குதத்தின் வழியே செலுத்தலாம்.
    சளி, காய்ச்சல், சின்னம்மை உள்ள 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரசிட்டமால் பாதுகாப்பானது.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here