Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 75

உறவுகள் சிறகுகள் – பாகம் – 75

431
0
SHARE

ந்தக் கணவனும் மனைவியும் தன் துணைக்குத் துரோகம் செய்ய வேண்டும் என விரும்பி, இன்னொரு உறவில் விழுவதில்லை. மனது நிறைய துணையின் மீது காதலும் அன்பும் கொட்டிக் கிடந்தாலும், ஏதோ ஒரு கணத்து மன, உணர்வுத் தடுமாற்றத்தில் துளிர்க்கிற அந்த உறவு, ஒரு கட்டத்தில் விட்டொழிக்க முடியாத அளவுக்கு விபரீதமாகிப் போய் நிற்கிறது.

தகாத உறவு எப்படி ஆரம்பிக்கிறது, அதில் சிக்கியவர்களிடம் காணப்படுகிற அறிகுறிகள், அவர்களது நடத்தையில் தென்படுகிற மாற்றங்கள், பேசித் தீர்க்கிற வழிகள், தீர்க்க முடியாதவர்களுக்கான அணுகுமுறைகள் என எல்லாவற்றையும் பேசிவிட்டோம். அதெல்லாம் சரிதான்… இப்படியொரு வேண்டாத உறவுக்குள் விழுந்து விடாதபடி, 100 சதவிகித அன்புடனும் அன்யோன்யத்துடனும் வாழ வழியே இல்லையா? இதுவே பலரின் கேள்வியும்.

தம்பதி இருவரும் தங்களைச் சுற்றி அப்படி எந்த இருப்புக் கோட்டையையும் எழுப்பிக் கொண்டு வாழ முடியாது என்றாலும் திருமணப் பந்தத்தை பலமாக மாற்றிக்கொள்ள முடியும் எப்படி ?

துணையைப் பற்றி உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை மறுபரிசீலனை செய்யுங்கள். திருமணப் பந்தத்தில் நுழைகிறபோது உறுதிமொழிகள் ஏற்பதும் ஊரோ மெச்சும்படி உங்களது திருமண உறவு பலமாக இருக்கப் போகிறதென நம்புவதும் உங்கள் உறவைக் காப்பாற்றப் போவதில்லை. எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்பு என்பதும் யதார்த்தம் என்பதும் வேறு வேறு. இரண்டுக்கும் இடையில் மலை அளவு வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலான தம்பதிகள் யதார்த்தத்தில் கவனம் செலுத்துவதில்லை. திரைப்படங்களும் புனைகதைகளும் திருமண உறவை கற்பனையான சுவாரஸ்யமாக மட்டுமே சித்தரிக்கின்றன. அதைத் தொடர்ந்து வருகிற யதார்த்தத்தை யாரும் பேசுவதில்லை. தம்பதி இருவருக்கும் இது குறித்த புரிதல் அவசியம்.

திருமணம் நிச்சயமான உடனேயே இருவரும் சில விஷயங்களைப் பற்றி இருவரது பார்வைகளையும் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். பணம்,செக்ஸ்,மதம்,குழந்தைகள்,எதிர்காலம் என எல்லாவற்றையும் பற்றி. இருவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகளையும் எதிர்கால யதார்த்தங்களையும் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.இருவருக்கும் இடையில் அதீத அன்பு இருப்பதால் எதிர்காலத்தில் மேற்சொன்ன விஷயங்களால் எந்தப் பிரச்னைகள் உருவாகி, பிரிவு வரை கொண்டு செல்லக் காரணமே இந்தப் பிரச்னைகள்தான்.
திருமணம் ஆகிவிட்டது…

இனி எதைப் பேச என நினைக்க வேண்டாம்.திருமணத்துக்குப் பிறகும் அந்த உறவை மேம்படுத்திக் கொள்ளலாம். உறுத்தலைக் கொடுக்கலாம் என நீங்கள் நினைக்கிற விஷயங்களை, உங்கள் துணையிடம் பேசித் தீர்க்கப் பாருங்கள். திடீரென ‘நான் கொஞ்சம் பேசணும்’ என்றால் உங்கள் துணைக்குத் தூக்கிவாரிப் போடலாம். பேசப் போகிற விஷயத்தைப் பற்றிப் பயம் வரலாம். எனவே மிக அமைதியாக பேச்சு வார்தையைத் தொடங்குங்கள். பல நேரங்களில் கணவர்கள், இது போன்ற பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. பேசும் போது, விஷயங்களை விதிகளாக முன் வைக்கலாம், சுவாரஸ்யமாக பேசலாம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here