Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 76

உறவுகள் சிறகுகள் – பாகம் – 76

173
0
SHARE

 ‘ஒன்ஸ்டாப் ஷாப்’ எனக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அதாவது, ஒரே கடையில் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிடமுடியும். திருமணத்துக்குப் பிறகு துணையை ஒன்ஸ்டாப் ஷாப்பாக நினைத்துக்கொள்கிறார்கள் ஏராளம். தனது எல்லாப் பிரச்னைகளுக்கும் துணையிடம் தீர்வு காண முயற்சிப்பார்கள். அதுவே திருமணத்துக்கு முன்பு தான் சம்பந்தப்பட்ட விஷங்களை தானே தீர்த்துக்கொண்டதை மறந்து, திருமணத்துக்குப் பிறகு எல்லா சுமைகளையும் துணையின் தலையில் சுமத்த நினைப்பர்கள். அது இருவருக்குமான உறவை நெருக்கமாக்குவதற்கு பதில், சுமைகளையே கூட்டும்.

திருமண பந்தந்தை பாசிட்டிவாக, சுவாரஸ்யமாக, அர்த்த முள்ளதாக, புத்தம் புதிதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற முயற்சியில் கணவன் – மனைவி இருவரின் பங்குமே அவசியமானது தான். ஆனாலும், இருவரில் ஒருவரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் இன்னொருவர் அதை சரியாக்கும் முயற்சியில் துணிந்து இறங்கலாம்.
துணியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உங்கள் சக்தி,பணம்,நேரம் என எல்லாவற்றையும் செலவழிக்கலாம். தவறில்லை.

முகேஷ் அம்பானி தன் பிறந்த நாளைக்கு விமானத்தையே பரிசளித்திருக்கிறார். அது போல விலை உயர்ந்த பரிசுகள் தான் துணையைச் சந்தோஷப்படுத்தும் என அவசியமில்லை. துணை எதிர்பாராத நேரத்தில், கொடுக்கும் அன்பளிப்பு அன்னியோன்யத்துக்கு நிச்சயம் உதவும். அதைக் கொடுக்கும் விதத்தில் புதுமைகளைக் கையாள வேண்டியது அவசியம்.

இருவருக்குமான தகவல் பரிமாற்றம் மிக முக்கியம்.அதே போல பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி அறிந்திருந்தாலும் அவசியம். வாழ்க்கையில் ஏதேனும் முரண்பாடுகள் வரும் பொது, அவற்றை மாபெரும் பிரச்சனைகளாக நினைத்துக் கொள்ளத் தேவையில்லை. சரியான தகவல் பரிமாற்றமும் பிரச்னைகளைத் தீர்க்கும் திறனும் இருந்தால், அதை சமூகமாகவும் பாசிட்டிவாகவும் நகர்த்திக் கொண்டு போக முடியும். வாழ்க்கையில் எந்தக் காலக் கட்டத்திலும் யாரும் நமக்கு அந்தக் கலையைக் கற்றுக் தருவதில்லை. மாறாக எப்போதும் நான் சொல்வதே சரி… நான் சொல்வதற்கு மற்றவர்கள் கட்டுப் பாட்டாக வேண்டும் என்கிற எண்ணத்துடனேயே வளர்கிறோம்.

சில தம்புதியர் பேச ஆரம்பித்த ஐந்தே நிமிடங்களில் பிரச்னைகளை ஊதிப் பெரியதாக்கிக் கொள்வார்கள். கேட்ட வார்த்தையில் திட்டுவது. துணையிடம் பேசும் நாகரிகம் அறியாது எடுத்தெறிந்து பேசுவது. பேச்சைத் தொடங்கியதுமே அடுத்தடுத்த பிரச்னைகளுக்குள் நுழைவது என வாக்குவாதத்தை இடியாப்ப சிக்கலாக்கி விடுவார்கள். மிக மிக கவனமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கி முடிக்கிற கலையைக் கற்பதும் கையாள்வதும் மட்டும்தான் இதற்கான ஒரே தீர்வு.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here