Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 77

உறவுகள் சிறகுகள் – பாகம் – 77

414
0
SHARE

மீண்டுமொருமுறை காதலில் விழலாம். என்னது ? தகாத உறவே இல்லாமல் வாழ்வ தெப்படி என்று பேசிக் கொண்டிருக்கிற வேளையில் இன்னொரு முறை காதலில் விழச் சொல்கிறாரே என மிரளவேண்டாம். நான் சொன்னது உங்கள் துணையிடமே இன்னொரு முறை காதலில் விழுவதைப் பற்றியது. திருமணமாகி வருடங்கள் கடந்திருக்கலாம். குழந்தைகளும் குடும்பமும் வளர்ந்திருக்கலாம்.பரவாயில்லை…

கடந்த காலத்தை சுகமாக அசை போடுங்கள். நீங்கள் பழக ஆரம்பித்த நாட்கள், அப்போதைய அழகிய தருணங்கள் என எல்லா நினைவுகளையும் மறுபடி மலரச் செய்யுங்கள். அப்போது உங்கள் துணைக்கு என்னவெல்லாம் பிடித்திருந்தது என நினைவுப்படுத்திப் பாருங்கள். ஆனால், பெரும்பாலான தம்பதியர் செய்வது என்ன தெரியுமா ? கடந்த காலத்தில் இருவரும் செய்த தவறுகளை மறக்காமல் நினைவில் வைத்திருந்து, தேவைப்படுகிறபோதெல்லாம் நினைவுபடுத்திக் குத்திக் காட்டுவது. அதற்குப் பதில் நல்லதை மட்டுமே அசை போடலாம்.

திருமணமான புதிதில் இருந்தது மாதிரியே இன்றும் நீங்கள் இருக்க மேட்டீர்கள்தானே ? உங்களது பல விருப்பங்கள். தேவைகள் மாறியிருக்கும். அதே போல உங்கள் துணைக்கும் அவரது விருப்பங்களும் வெறுப்புகளும் நிச்சயம் மாறியிருக்கும். அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

கடைசியாக ஒரே ஒரு விஷயம்…. உங்கள் துணையிடனேயே நீங்கள் கள்ளக்காதல் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேறு யாராவது முந்திக்கொள்வார்கள்… ஜாக்கிரதை !

சமீபத்திய என் இஸ்லேண்ட் பயணத்தில் அந்த அதிர்ச்சியான அறிவிப்பைப் பார்த்தேன். ஒரு கட்டிடம் அளவுக்கான அந்த பிரமாண்ட பேனரில்தான் அப்படியொரு காட்சி.

13 சதவிகிதப் பெண்களுக்கு மட்டுமே திரைத்துறையில் இறங்க நிதி உதவி கிடைக்கிறது. மீதமுள்ள 87 சதவிகிதமும்.ஆணாதாக்கம்தான்’ என்கிற அந்தத் தகவல் உலகம் முழுவதிலுமான ஆண் – பெண் சமத்துவமின்மையையே மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்தியது.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here