Home Common Health Problems கை மணிகட்டு வலியும்,மடக்க முடியாமையின் காரணம் என்ன?

    கை மணிகட்டு வலியும்,மடக்க முடியாமையின் காரணம் என்ன?

    5906
    0
    SHARE

     

    டாக்டர் ராதாகிருஷ்ணன் பால்ராஜ்

    மது உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றோடுஒன்று பினைக்கப்பட்டதே ஆகும். நமது அன்றாட வேலை பெரும்பாலும் நமது கைக்குத்தான் அதிகம்.அந்த கையில் வலி ஏற்பட்டால் வேலைகள் முடங்கும்.கையில் ஏதேனும் குடையோ அல்லது கத்தியோ இருகி பிடிக்கமுடியாத நிலை ஏற்படும். அவ்வாறு பிடிக்கும் போது வலியும்,ஒருவிதமான குத்தலும் மணிகட்டில் இருக்கும். சமைக்கும் போது காய்கறி அரியமுடியாத நிலை,தண்ணிர் குடம் தூக்கமுடியாமை,மற்றும் காபி டம்ளர் அதிகநேரம் பிடிக்க முடியாத நிலைக்கும் போய்விடும்.மணிக்கட்டு அசைத்தாலே வலிக்க ஆரம்பித்து விடும்.

    வலிக்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி நம்மிடம் கூறுகின்றார் பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் ;டாக்டர் ராதகிருஷ்ணன் பால்ராஜ்.
    கை வலி  என்று பொதுவாக கூறிவிடமுடியாது. அதில் நிறையபாகங்கள் உண்டு.விரல்,மணிகட்டு,முட்டி, தோல்பட்டை.என்று பிரிக்கலாம்.கை ஏன் வலிக்கின்றது காரணம் என்ன என்று தெரிந்த பின்னே சிகிச்சை செய்யமுடியும்.

    நோயின் தன்மை;

    மணிக்கட்டின் வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த நோய்க்கு ‘டி குயர்வெயினஸ் ரீனோ சைனொவைடிஸ்’ (De Quervain’s tenosynovitis)  என்று மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது.
    மணிக்கட்டின் ஓரமாகச் ஒரு திசுப்படலத்தின் ஊடாச் சென்று பெருவிரலை அடையும் தசைநாணில் (tendon)  ஏற்படும் நோயாகும். பெருவிரலை ஆட்ட வளைக்க உதவுவது அந்தச் தசைநாண் ஆகும். தசைநாணை சவ்வு என்றும் கூறலாம்.

    இந்த நோய் தாக்கத்துக்கு உள்ளவர்களுக்கு மணிக்கட்டை வளைக்கும் போதும், ஏதாவது பொருளை பற்றிப் பிடிக்கும்போதும், வலி அதிகரிக்கும்.

    இந்த நோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும்  தசைநாண்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் உண்டாகின்றன.

    நோயின் அறுகுறி என்ன?

    இந்த நோயின் முதல் அறிகுறி வலி ஆகும். பெருவிரலின் அடிப்பகுதி முதல் மணிக்கட்டுவரை இந்த வலி இருக்கும். விரலை ஆட்டி வேலை செய்யும்போது வலி அதிகமாகும். அந்த இடத்தில் சற்று வீக்கமும் உண்டாகலாம்.

    நாம் அன்றாடம் செய்யும் வேலைகளின் போது பெருவிரலையும் மணிக்கட்டையும் பயன்படுத்துவதில்  சிரமம் உண்டாகும். விரலை மடக்கும் போது திடீரென இறுகிப் பின்னர் விடுவதுபோன்ற உணர்வு ஆகியவை ஏற்படும்

    வலியைத் தாண்டி பெருவிரல் மற்றும் சுட்டு விரலிகள் மரப்பது போன்ற உணர்வும் ஒருசிலருக்கு ஏற்படும்.

    ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் இருந்து  விட்டால் வலியானது முன்புறமாகப் பெருவிரலுக்கும், பின்புறமாக முன்னங்கையிற்கும் பரவி மேலும் அதிகரிக்கும்.

    பெருவிரலை இயக்கும் இரு தசைநாண்கள் மணிக்கட்டுப் பகுதியில் ஒரு திசுப்படலத்தின் (fascia)  ஊடாகவே போகின்றது. அந்த  தசைநாண்களுக்கு வேலை அதிகமாகும்போது அவற்றில் அழற்சி ஏற்பட்டுத் தடிப்பு அடையும். இதுவே நோய்க்கான முக்கிய காரணமாகும்.
    இருந்தாலும் ரூமட்ரொயிட் ஆர்திரைடிஸ் போன்ற மூட்டு நோய்களின் போதும் உருவாக்கூடும்.

    மணிகட்டிற்கு அல்லது அத்தசைநார்களில் அடிபடுவதால் உட்காயங்கள் ஏற்பட்டு, அதன் விளைவாகவும் இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    ந்த வயதினரை அதிகம் தாக்கும்.

    30 முதல் 50 வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. அத்தசை நாண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் பணிகளில் செயல்படுகின்ற நபருக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    எனவே, விவசாய வேலையின் போது தண்ணீர் பாய்ச்சுவது,களைப்பறிகும்போதும் வெட்டுவது போன்ற வேலைகள், கொல்ப் டெனிஸ் போன்ற விளையாட்டுக்கள், குழந்தையைத் தூக்குவது போன்றவையும், குப்பை கூட்டும் தொழில் மற்றும் கைத்தொழில் செய்பவர்கள் தொடர்ந்து செய்யும்போது இப் பிரச்சனை இருக்க கூடும்.

    ஆண்களை விட பெண்களேயே இந்த நோய் அதிகமாக தாக்குகின்றது. கர்ப்பமாக இருக்கும்போதும் ஏற்படுவதுண்டு. பொதுவாக நடுத்தர வயதினரிடையே அதிகமாக காணப்படுகின்றன.
    முதலில் எந்தெந்த வேலைகள் செய்தால் வலி எடுக்கிறதோ அவற்றைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வலி உள்ள இடத்தில் ஐஸ் வைப்பது வலியையும் வீக்கத்தையும் தணிக்க உதவியாக இருக்கும்.

    வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

    மணிக்கட்டையும் பெருவிரலையும் ஆடாமல் வைத்து ஓய்வு கொடுப்பது அவசியமாகும்.

    இதற்கான splint,  brace  போன்றவை மருந்தகங்களில் கிடைக்கும். இவற்றை பகல் முழுவதும் அணிந்திருக்கலாம்.

    வலியைத் தணிப்பதற்கு சில பயிற்சிகளும் உதவியாக இருக்கும்.
    வலியுள்ள இடத்தில் மருத்துவர்கள் ஸ்டிரோயிட் (Steroid) ஊசி மருந்து செலுத்தப்படும். இதுவும் வலியை குறைக்க உதவும்.

    மிகவும் அரிதாக வலி மிகக் கடுமையாக இருக்கும்போது சத்திரசிகிச்சை கொடுக்கப்படுவதுண்டு. தசைநாணை அழுத்திப் பிடிக்கும் திசுப்படலத்தை வெட்டி இளக்குவதன் மூலம் தசைநாண்களை எளிதாக அசைய வைக்க முடியும்.

    பயிற்சி முறைகள் என்ன;

    வயியுள்ள கையில் ஒரு பந்தை பற்றிக் கொள்ளுங்கள். மெதுவாக பந்தின் மீது அழுத்துங்கள். வலி உண்டாகவில்லை என்றால் அழுத்தத்தை சற்று கூடுதலாகப் பயண்படுத்துங்கள். சுமார் 5 செகண்டுகளுக்கு அழுத்தி வைத்திருந்துவிட்டு பின்னர் பிடியைத் தளர்வடையச் செய்யுங்கள்.


    இவ்வாறு 5 முதல் 10 தடவைகள் செய்யுங்கள். தினமும் நான்கு அல்லது ஐந்து முறை இப் பயிற்சியைத் தொடரலாம்.

    இப்பயிற்சியைச் செய்வதற்கு முன்னரும் பின்னரும் அந்த இடத்திற்கு சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மறு கையால் மெதுவாக அவ்விடத்தை நீவி விடலாம்.

    முழங்கை மணிக்கட்டு EPL Stretch பயிற்சி

    வலியுள்ள பக்கக் கையை முழங்கைப் பகுதியை மடிக்காது, நேராக நீட்டுங்கள். அதே நேரம் பெருவிரலை ஏனைய நான்கு விரல்களும் பொத்தியிருக்குமாறு மூடுங்கள். இப்பொழுது உங்கள் மணிகட்டை சின்ன விரல் பக்கமாக மெதுவாக மடியுங்கள்.

    அப்போது வலி ஏற்படுவதாக உணர்ந்தால் மேலும் மடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். வலி அதிகரிக்கவில்லை எனில் 5 முதல் 10 தடவைகள் இதே பயிற்சியைத் தொடரவும்.

    வலியுள்ள பக்கத்தின் முழங்கையை நேராக நீட்டுங்கள். அக் கையின் பிற்புறத்தை மற்றக் கையால் பற்றி அது மணிக்கட்டுப் பகுதியில் முன்புறமாக வளையுமாறு சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். 10 முதல் 30 நொடிக்கு அவ்வாறே பிடித்திருங்கள்.


    அடுத்து நோயுள்ள கையின் பெருவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்களையும் மற்றக் கையால் உட்புறமிருந்து வெளிப்புறமாகத் தள்ளுங்கள். பத்து முதல் முப்பது செகண்டுகளுக்கு அவ்வாறே வைத்திருங்கள். மூன்று தடவைகள் இவற்றை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று வேளை தொடர்ந்து  செயல் படுத்தவும்.

    கைலாகுப் பயிற்சி என்றால் என்ன?

    கைலாகு பயிற்சி என்பது தசைநார்கள்  இறுக்கமின்றி இருக்க உதவிசெய்கின்றது.

    உங்களது மணிக்கட்டு, முன்னங்கை, மற்றும் விரல்கள் ஆகியவற்றின் தசைநார்கள் இறுக்கமின்றி தளர்கின்றன. இந்நோய்க்கு நல்ல பயிற்சியாகும்.
    எனவே பாதிக்கப்பட்ட கையால் மற்றக் கையைப் பற்றிப் பயிற்சி செய்ய வேண்டும். கைகளை இறுக்கப் பிடிக்காமல் தளர்ச்சியாகப் பற்றிக் கொண்டு கைலாகு கொடுப்பது போல மேல் கீழாக சற்று ஆட்டுங்கள். அதேபோல பக்கவாட்டிலும் சில தடவை தொடருங்கள். இது போன்ற பயிற்சியை 30 செகண்டுகள் வரை மேற்கொள்ளலாம்.

    ஓய்வு மற்றும் பயிற்சிகளின் பலனாக வலி தணிந்து விடும். மீண்டும் அந்த தசைநார்களுக்கு அதிகமாகவேலை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மீண்டும் வலி வராமல் தடுக்கப்படும்.

    வேலை என்பது எவ்வளவு இருந்தாலும் ஓய்வும் சரிபாதியாக இருப்பது அவசியமாகும்.அந்த எல்லையை மீறும் போதுதான் உடல் இயக்க சக்தி ஈடுகொடுக்கமுடியாமல் சிரமப்படுகின்றன.சத்தான உணவும் உடல் பயிற்சியும் அவசியமாகும்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் பால்ராஜ்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here