Home question and answer கரு முதல் குழந்தை வரை – பாகம் 1

கரு முதல் குழந்தை வரை – பாகம் 1

389
0
SHARE

நாங்கள் பனி நிமித்தம் காரணமாக குழந்தைப் பேற்றை நான்கு ஆண்டுகள் தள்ளிப்போட்டோம். இப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். நல்லமுறையில் குழந்தையைப் பெற என்னென்ன
விஷயங்களை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்?

குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன், குழந்தை பெறுவதற்கான சரியான வயது எது? மாதவிலக்கு நிகழும் காலத்தில் கருத்தரிக்க எந்த நாள்கள் உகந்தவை? கருத்தடை சாதனத்தை அகற்ற வேண்டிய காலம் எது? முட்டை உருவானதை எவ்வாறு அறிவது? எப்போது கருத்தரிக்க முடியும்? கருத்தரிக்க எவ்வளவு காலமாகும்? கணவன்-மனைவி இடையே ரத்தப் பொருத்தம் உள்ளதா? என்பது போன்ற பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிறகு சிறு வயதிலேயே உங்களுக்கு அம்மைப் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா? கர்ப்ப காலத்தில் மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தலாமா? பனி செய்யும் இடங்களால் கருவுக்கு ஆபத்துகள் ஏற்படுமா? பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய பாதிப்புகள் என்னென்ன? இப்படிப்பட்ட பல அடிப்படை விஷயங்களைப் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

என்னுடைய வயது 20, எனது கணவர், ‘உனக்கு இன்னும் குழந்தை பெறுவதற்கான உரிய வயது ஆகவில்லை. அதனால் குழந்தைப்பேற்றை இன்னும் பத்தாண்டுகள் தள்ளிப்போடலம் என்கிறார். குழந்தை பெற சரியான வயது எது? எந்த வயதில் குழந்தை பெறுவது சுலபம்? முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?
பெண்கள் தாய்மை அடைவதற்கு மிகச் சரியான வயது இருப்பது முதல் முப்பது வரை தான் என பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஏனெனில், உடலில் உள்ள பிற உறுப்புகளைவிட பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சி அடைகின்றன. உடல் ரீதியாக கருப்பை முதிர்ந்துவிடுவதால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. முப்பது வயதுக்குப் பிறகு கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறையத் தொடங்கி, நாற்பது வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்கும் சூழல் தொடங்குவதால் கருவுறும் வாய்ப்பு முடிவுக்கு வந்து விடுகிறது.

இளம் வயதில் கருமுட்டைகள் வளமாக உருவாகும். வயது ஆக ஆக குறைவான எண்ணிக்கையில், ஒரு மாதம் விட்டு இன்னொரு மாதம் முட்டை உருவாகும் நிலையும் உண்டாவதால் திட்டமிட்ட கருத்தரிப்பு சாத்தியமற்றுப் போவதற்கான வாய்ப்பு உண்டு.

முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் கணவர்கள், தங்கள் மனைவியரை விட ஐந்து அல்லது பத்து வயது அதிகமானவர்களாக இருப்பார்கள். அந்த வயதில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களே இல்லாத நிலை ஆகியவை உண்டாவதால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆகவே, தாய்மையடைய விரும்புவர்கள் அதற்காகத் திட்டமிட சரியான வயது, தாய்மையை முழுமையா அனுபவிக்கச் சிறந்த வயது என்றால், அது இருபது முதல் முப்பது வயது வரைதான்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here