Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 43

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 43

819
0
SHARE

மெதுவாக ஆறும் காயமும், சிராய்ப்பும்
ர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருக்கும்போது காயத்தை ஆற்றும் உடலின் இயல்பான தன்மை மாறுவதால் காயங்கள் எளிதில் ஆறாது.

தவிர, இவர்களின் திசுக்கள் நோயின் பாதிப்பால் மிகவும் மென்மையாக மாறிவிடுவதால் நோய்த் தொற்றும் அதிகமாக இருக்கும்.

சருமம், சிறுநீரத் தாரை, பிறப்பு உறுப்புகளில் நோய்த்தொற்று

சரும அடுக்குகள் பாதிப்படைந்து மெலிந்துவிடுவதோடு, அதன் நோய்த் தடுக்கும் திறனை சர்க்கரை நோய் குறைத்து விடுகிறது. இதனால், நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் சக்தியும் குறைந்து விடுகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டி இருக்கும் நிலையில், சிறுநீர்ப்பை, பிறப்பு உறுப்புப் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமையால் அவ்வப்போது நோய்த்தொற்று ஏற்படுவது சர்வ சாதாரணம். ஆண் -பெண் இருவருக்குமே பிறப்பு உறுப்புப் பகுதியில் கொப்புளங்களும் தோன்றும். சருமம் வறண்டு நமைச்சலுடன் இருக்கும்.

ஈறுதேய்தலும், பற்கள் விழுதலும்
ரத்தத்தில் உள்ள அதிகச் சர்க்கரையானது வாயில் உள்ள ஈறுகளை வலுவிழக்கச் செய்து, நோய் எதிப்புத் திறனையும் குறைத்து விடுகிறது.

இதனால், ஈறுகளில் மட்டுமின்றி தாடை எலும்புகளிலும் நோய்த்தொற்றுகள் எளிதில் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் சீழ்ப் பிடித்தல், ஈறுகளில் இருந்து பற்கள் கழன்று கொள்ளுதல், பற்கள் ஆடுதல் போன்றவை ஏற்படுகின்றன.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here