Home Common Health Problems ஞாபக சக்தியில் ஏற்படும் மாற்றங்கள்

    ஞாபக சக்தியில் ஏற்படும் மாற்றங்கள்

    1015
    0
    SHARE

    ங்களுக்கு வயதாகும் போது உங்கள் மூளை உங்களுடன் சில விளையாட்டுகளை ஆரம்பிக்கும். அதனைப் புரிந்துகொள்ள விவேகம் தேவை. நீங்கள் மூக்குக்கண்ணாடிகளை எங்கே வைத்தீர்கள் என்பதையும் மறந்து விடுவீர்கள். ஒரே சமயத்தில் மூன்று வேலைகளைச் செய்த உங்களால், தற்போது ஒரு வேலையைக் கூட சரியாகச் செய்ய முடியாது.

    இதற்காகக் கவலைப்பட வேண்டாம். இது வயதாவதால் ஏற்படும் ஞாபகக் குறைவே.
    மனஅழுத்தமும் படபடப்பும் கூட உங்கள் நினைவாற்றலையும் கூர்ந்து கவனிக்கும் திறனையும் பாதிக்கும்.
    பொதுவாக வயதாவது நீண்ட காலா நினைவாற்றலைப் பாதிப்பதில்லை. ஆனால், குறுகிய காலா ஞாபகத் திறன் குறைபடலாம்.

    ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள உங்கள் மூளை சிக்கலாக வேதியியல் மற்றும் மின்னியல் செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தச் செயல்களைச் செய்யும் நரம்பு அணுக்கள் வயதாகும் போது பாதிக்கப்படுவதால் மூளையின் செயல்திறன் குறைகிறது.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here