Home Common Health Problems உடல் எடை திடீரென்று அதிகரிப்பதற்கான காரணங்கள்

    உடல் எடை திடீரென்று அதிகரிப்பதற்கான காரணங்கள்

    298
    0
    SHARE

    யது வந்தவர்களுக்கு மிகவும் தொல்லையளிக்கும் ஒன்று உடல் பருமனாகும். அதிகரிக்கும் எடை ஆண்டுக்குச் சில கிலோ கிராம் என மெதுவாக அதிகரிக்கிறது. நம் கட்டுப்பாட்டுடன் கூடிய உணவுப் பழக்க வழக்கமும் முறையான உடற்பயிற்சியும் இதனைக் தடுக்கும்.

    உங்களுக்கு திடீரென எடை அதிகரித்தால் கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படுகிறதா எனப் பார்க்கவும்:
    மனநல மாற்றங்கள்

    மனப்பதற்றம் அதிகமாக இருத்தல், மன அழுத்தம், மனசோர்வு போன்றவை கூட உங்கள் அன்றாட வேலைகளைப் பாதித்து உணவு சாப்பிடும் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

    அன்றாடம் செய்யும் செய்யும் வேலைகளைக் குறைத்து கொள்ளுதல்

    அன்றாட வேலைகளைத் தடுக்கும் சில காயங்கள், நல்ல நம் உடலுழைப்பு உள்ள வேலைகளை விட்டுவிட்டு உட்கார்ந்து செய்யும் வேலையை செய்தல், மாடிப்படி ஏறுதலைத் தவிர்த்தல், வேலைக்கு போகும் போது நடந்து செல்வதைத் தவிர்ப்பது போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கலாம்.

    உணவு மாற்றங்கள்
    மது மற்றும் சோடா அதிகமாக குடிப்பதால், அதிக கொழுப்புள்ள உணவுவகைகளை விரும்பிச் சேர்த்துக் கொள்வது அதாவது ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள், வறுத்த உணவுகள், வீட்டில் செய்யும் உணவைவிட வெளியில் விற்கும் உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படலாம்.

    புது விதமான மருந்துகளை எடுத்து கொள்வதால்

    நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளில் சில வகை மருந்துகள் உடல் எடையை அதிகரிக்கும், மனசோர்வுக்காக எடுத்து கொள்ளும் மருந்துகளால் உடல் எடை அதிகரிக்கலாம்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here