Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 78

உறவுகள் சிறகுகள் – பாகம் – 78

244
0
SHARE

ணவன் – மனைவி இருவரும் சமம் என்பதை திருமணங்கள் காலங்காலமாக சொல்லி வந்தாலும், யதார்த்த வாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை. குறிப்பாக பெண்களுக்குத் திருமணத்துக்குப் பிறகு சுய அடையாளம் என்பது காணாமல் போய்விடுகிறது. சமுதாயத்தில் பிரபலமான இடத்தில் இருந்த பெண்கள் என்றால் திருமணத்துக்குப் பிறகு அவர்கள் சந்திக்கிற அடையாளாச் சிக்கல் இன்னும் திரவிரமாகும்.

திருமணமே செய்யாமலோ, கணவரை இழந்தோ தனித்து வாழ்கிற பெண்கள் மட்டுமே இந்தச் சிக்கல் இல்லாமல் சமுதாயத்தில் வலம் வருவதையும் பார்க்கிறோம். ஆண்களுக்கோ திருமணம் அப்படி எந்த மாற்றத்தையும் தருவதில்லை. இந்தச் சூழலுக்கு சமுதாயமும் ஒரு காரணம். திருமணத்தில் தன்னைத் தொலைக்கிற பெண்களுக்கு, ஒரு கட்டத்தில் தான் சரியாக வாழவில்லை என்கிற எண்ணம் அதிகரிக்கும்.

ஆண் என்றால் ஆற்றல் வாய்ந்தவன் என்றும் பெண் என்பவள் ஆற்றல் அற்றவள் என்றும் ஒரு மனநிலையை உருவாக்கும். திருப்தி இல்லாத திருமணத்தில் இருந்து மீள்வதோ, இரண்டவது, மூன்றாவது திருமணங்கள் செய்து கொள்வதோ ஆணுக்குச் சாதாரண விஷயமாகவும், அதுவே பெண்ணுக்குத் தவறான விஷயமாகவும் சித்தரித்திருக்கிறது இந்தச் சமுதாயம்.

திருமணத்துக்குப் பிறகும், அதற்கு முன்பாக சந்தோஷத்தைத் தொலைக்காமல் வாழ்ந்தால்தானே, வாழ்க்கை உயிர்ப்போடு இருக்கும்?

திருமணத்துக்குப் பிறகு சுயம் தொலைத்து, மன அழுத்தத்தில் தாளிப்படுகிற பெண்கள் 47 சதவிகிதம் என்கிறது லேட்டஸ்ட் புள்ளிவிவரம். கணவரிடமிருந்து உளவியல் ரீதியிலான அரவணைப்போ, ஆறுதலோ கிடைக்காததும், அக்கறை இல்லாததுமே காரணங்களாம்.

திருமணத்துக்குப் பிறகு பல விஷயங்களிலும் பெண்ணே தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியவளாக இருக்கிறாள், அந்தக் கட்டாயம் ஆணுக்கு இருப்பதில்லை. இந்தப் போக்கு ஆண்களுக்குமே அத்தனை சரியானதல்ல. மனைவியின் கோபம் கணவர் பக்கம் திரும்பவத்துடன், தனக்கு நடக்கும் எல்லாவற்றுக்கும் அவரையே குறை சொல்ல வைக்கவும் காரணமாகிவிடும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here