Home Common Health Problems இதய நோய் – 12

    இதய நோய் – 12

    390
    0
    SHARE

    புகைத்தல் அல்லது புகையிலை மெல்லுதல்

    ந்தியாவில் சிகரெட் அல்லது பீடி புகைப்பவர்கள் , புகை பழக்கம் இல்லாதவர்களை விட 4 மடங்கு அல்லது 400 சதவீதம் இதய நோய் தோன்றும் வாய்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் பார்மிங்காம் என்னும் ஒரு சிறிய நகரத்தில் பார்மிங்காம் இதய நோய் ஆய்வு கழகம் 5000 குடும்பங்களுக்கு 30 வருடங்களுக்கு மேலாக ஒரு ஆய்வு செய்தது.

    புகைபிடித்தல் உறுதியாக மாரடைப்பு நோய் அபாயத்தை அதிகப்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் முடிவு செய்யப்பட்டது . அதே மக்களை தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்த போது புகை பிடித்தலை நிறுத்திய பின்னரும் கூட மக்களுக்கு மாரடைப்பு நோய்க்கு இலக்காகும் வாய்ப்பு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது . புகைபிடிப்பவர்கள் புகைத்தலை நிறுத்திய பின்னர் 5 வருடங்கள் கழித்தும் கூட இதய நோய்க்கு ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள் .

    புகை பிடிப்பதால் ஏற்படுகிற இதய நோய் ஆபத்தின் அதிகரிப்பு புகை பிடிக்கும் அளவுக்கும் , அதன் காலத்தின் நீட்சிக்கும் தொடர்புடையது . ஒரு நாளைக்கு பத்து சிகரெட்டை பயன்படுத்தும் ஒருவர் 5 சிகரெட்டுகளை பயன்படுத்துவரை காட்டிலும் 2 மடங்கு அதிக ஆபத்திலிருக்கிறார் .

    புகை பிடிக்கும் போது உள்ளே சுவாசிக்கப்பட்ட இலையின் புகை இதய இரத்த குழாய்களின் உட்சுவர்கள் பாதிக்க காரணமாகிறது . புகையிலையில் உள்ள ஆயிரக்கணக்கான வேதியியல் பொருட்களில் நிக்கோட்டின், தார், ஆல்கலாய்டுகள் முதலியவைகள் இந்த நாசத்தை செய்து உட்சுவர்களை கொலஸ்ராலும், கொழுப்புகளும் படியதக்கதாக மாற்றிவிடுகிறது.

    இரத்த குழாய்களின் உட்புறம் க்ளூ, என்னும் பசையை தடவி அதில் ஒரு பொருள் சிக்கிக்கொள்ளுவது போல மேலே சொன்ன வேதியியல் பொருள்கள் கொலஸ்ராலை பிடித்து ஒட்டவைத்து கொள்கின்றன.

    புகையிலையை எந்த உருவத்தில் பயன்படுத்தினாலும் புகைபிடித்தல் எவ்வளவு கெடுதலை தருமோ , அதற்கு சமம் என்று ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here