Home Common Health Problems இதய நோய் -13

    இதய நோய் -13

    413
    0
    SHARE

    நேரடியாகவோ , அல்லது மறைமுகமாகவோ இதய நோயை உண்டாக்கும் ஆபத்து காரணிகளில் மது அருந்துதலும் ஒன்று. அது இதய நோயுடன் பல வகைகளில் தொடர்பு உடையதாக மாறிவிட்டது . ட்ரை கிளிசரைடுகளின் ஒரு பகுதி பொருளாகிய கிளிசரால் போன்ற அமைப்பை உடைய மதுவினை அருந்துவதால் , அது உடலில் ட்ரை கிளிசரைடுகளை அதிகரிப்பதில் கொண்டு சேர்க்கிறது .

    கொழுப்புகளின் அளவுகளை கண்டறியும் சோதனைகளை செய்ய இரத்தம் எடுக்கும்போது நோயாளிகள் கடந்த 12 மணி நேரத்திற்குள்ளாக மது அருந்தி இருப்பின் பல நல்ல பரிசோதனை கூடங்கள் அதனை தவிர்த்து விடுகின்றன . மதுவினால் ட்ரை கிளிசரைடுகள்
    அதிகமாகி விடுவதே காரணம் ஆகும் .

    ஆல்கஹால் , நோயாளிகளுக்கு மிக அதிக கலோரி வெப்பத்தை கொடுக்கின்றது . குடிக்கும்போது பலர் எண்ணெயில் பொரித்த பல பொருள்களை உண்பார்கள் . அது கொழுப்பினையும் கொலஸ்ராளையும், கலோரிகளையும் அதிகப்படுத்துகிறது . மது மன இறுக்கத்தையும் , குடும்பத்தில் உள்ளவர்களிடையேயும் தவறான அணுகுமுறையையும் வளர செய்கிறது . மது கல்லீரல் நோய்க்கும் கல்லீரல் செயலற்று போவதற்கும் மற்றும் கேஸ்ட்ரைட்டிஸ், நரம்பு மண்டலத்திற்க்கு கேடு ஆகியவைகளோடு தொடர்புடைய முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here