Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 80

உறவுகள் சிறகுகள் – பாகம் – 80

215
0
SHARE

தான் யார், தனது விருப்பங்கள் என்ன என்பதில் தெளிவற்றவராக இருப்பார், தனது திருமண உறவில் தான் எதிர்பார்ப்பது என்ன என்பதிலும் தெளிவிருக்காது.

தனக்கென ஒரு தனி வாழ்க்கை இருப்பதை உணராதவராக இருப்பார். பிடிக்காத வேலையைப் பார்ப்பதில் தொடங்கி, பல விஷயங்களிலும் இது பிரதிபலிக்கும்.

கணவர் கொடுக்கும் விலை உயர்ந்த அன்பளிப்பிலும் ஆடம்பரமான பயணத்திலும் மிகச் சுலபமாகக் கரைந்துவிடுவார்.

கணவரை சந்தோஷப்படுத்த எதையும் செய்யத் தயாராக இருப்பார் அணிகிற உடை முதல் உண்கிற உணவு வரை எல்லாவற்றிலும்…

கணவர் சொல்கிற எதற்கும் தலையாட்டத் தயாராக இருப்பார். அது அவர்களது உறவுக்கு ஆரோக்கியமானதா, இல்லையா என்பதை யெல்லாம் யோசிக்கமாட்டார். உதாரணத்துக்கு அதிகம் படித்துவிட்டு, நல்ல வேலையில் இருக்கிற பெண், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாது என்கிற கணவரின் வார்த்தைகளுக்கு அப்படியே பணிவார்.

தனக்கென ஒரு தனி அடையாளத்தைத் தேடிக்கொள்ள நினைக்காமல், இன்னாரின் மனைவியாக அறியப்படவே விரும்புவார்.

தனக்கு எது சரியெனப்படுகிறது என்பதைத் துணிச்சலாக வெளிப்படுத்தமாட்டார்.

கணவர் தனக்காக தன் சார்பாக எடுக்கும் எந்த முடிவையும் அப்படியே ஏற்பார். அது குறித்து விவாதம் செய்ய விரும்ப மாட்டார். கணவரிடம் பேசி மாற்றலாம் என்கிற நிலையில் கூட அதற்கான முயற்சிகளை எடுக்க மாட்டார்.

இதன் பின்னணியில் கலாசார ரீதியிலான, உளவியல் ரீதியிலான, உயிரியல் ரீதியிலான தாக்கம் பெருமளவில் உண்டு.

ஆணின் வளர்ப்பு முறையே அப்படி அமைந்து விடுகிறது. பெண் என்பவள் மற்றவரைச் சார்ந்திருக்க வேண்டியவள் என்றும் ஆண் என்பவன் சுதந்திரமானவன் என்றும் வளர்க்கப்படுவது எல்லா மதங்களிலும் இருக்கிறது.
பெண்ணானவள் பொத்திப்பொத்திப் பத்திரமாக, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறாள். ஆண் போராட்ட குணத்துடன், தன்னிச்சையாக வளர்க்கப்படுகிறான்.

பெண் என்பவள் மற்றவர் பேச்சைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டியவள் என்றும். எதிர்த்துப் பேசுகிற உரிமை ஆணுக்கு மட்டுமே உண்டு என்றும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

சினிமாக்களில் கூட ஹீரோயினுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஹீரோ வந்து காப்பாற்றுவார். அதுவே ஹீரோவுக்கு பிரச்னை என்றால் ஹீரோயினின் உதவி தேவைப்படுவதில்லை. இது யதார்த்த வாழ்க்கையிலும் இருக்கிறது.

பிரச்னை வந்தால் அழுவது பெண்ணின் இலக்கணமாகவும், எதிர்த்து நிற்பது ஆணின் அடையாளமாகவும் சொல்லப்பட்டு வளர்க்கிறார்கள். மீறுகிற பெண்ணைத் தூற்றும் இந்தச் சமுதாயம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here