Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 81

உறவுகள் சிறகுகள் – பாகம் – 81

247
0
SHARE

திருமணமாகாத பிரபல பெண்ணிடம், உங்கள் வாழ்க்கை நிறைவு பெற்று விட்டதாக நினைக்கறீர்களா என விடாமல் விரட்டும் கேள்வியின் பின்னணியில் உள்ளது என்ன ? திருமணம் என்கிற பெயரில் ஆணுடன் இணைகிற போதுதான் அவளது வாழ்க்கை புராணமடைகிறதாம். அதுவே திருமணமாகாத எந்த ஆணும் இப்படியொரு கேள்வியை எதிர்கொள்வதில்லை.

உடுத்துவது, சமைப்பது, சாப்பிடுவது என எல்லாவற்றுக்கும் கணவரின் அனுமதியும், அங்கீகாரமும் கேட்டே பழக்கப்படுகிறாள் பெண்.

உடலியல் ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆணின் கோபத்துக்கும் வன்முறை குணத்துக்கும் காரணம் அவனது உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான். அதனால்தான் ஆண்கள் அழுவதில்லை. தனது பலவீனங்களைப் பகிரங்கமாகவோ, மனைவியிடம் மனம் விட்டோ பேசுவதில்லை.

தாம்பத்திய உறவு கொள்ள கணவனுக்கு மனதளவிலான தயாரிப்புகள் ஏதும் அவசியப்படுவதில்லை. நினைத்த நேரத்தில் அதை சாதித்துக்கொள்ளலாம். பெண்ணுக்கோ அவள் உடலில் உள்ள நியூரான்களும் ஹார்மோன்களும் இதற்கு நேர்மாறாக சிந்திக்க வைப்பவை. அவளுக்கான எல்லைகளைத் தீர்மானிப்பது வரை அவற்றின் ஆதிக்கம் இருக்கிறது.

கரையுதே… மறையுதே

கணவரின் கட்டுக்குள் கரைந்துபோகிற இந்த டிரெண்ட் உலகம் முழுக்கவே பரவலாகக் காணப்படுவதை லேட்டஸ்ட் ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. டீன் ஏஜில் இருக்கும் பெண்கள் முதல் வயதான பெண்மணிகள் வரை எல்லோரும் இதில் அடக்கம். டீன் ஏஜ் பெண்களில் 4ல் ஒருவர் தன் காதலரின் அடக்குமுறைக்குள்ளாவதையும் இந்த ஆய்வு சொல்கிறது.

தன்மானம் தன்னம்பிக்கை போன்ற எதைப் பற்றியும் இந்தப் பெண்களுக்குத் தெளிவான வரையறைகள் இருப்பதில்லை.

தன் காதலர் அல்லது கணவரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், அவர் தன்னைவிட்டு விலகிவிடுவார் என்கிற பாதுகாப்பின்மை பல பெண்களுக்கும் இருக்கிறது.

ஒரு உறவில் இப்படிப்பட்ட விஷயங்களை சந்திக்காமல் தப்பிக்கிற பெண்களும், இரண்டாவது காதல் அல்லது திருமணத்தில் கட்டாயம் மாட்டிக்கொள்கிறார்கள்.

பேரழகும், பெரிய அந்தஸ்தும், பெயரும், புகழும் உள்ள பெண்களும், காதலில் சுலபமாகக் கரைந்து விடுகிறார்கள். அதிலும் தன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்த ஒருவரைத் திருமணம் செய்கிறபோது, இந்தக் கரைதலும் காணாமல் போதலும் மிக இயல்பாகவே நடந்துவிடுகிறது.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here