Home Common Health Problems இதய நோய் – பாகம் 22

    இதய நோய் – பாகம் 22

    262
    0
    SHARE

    தய நோயாளிகள் பலருக்கு இசிஜி இயல்பு நிலையிலேயே இருப்பதை சாதாரணமாக காணலாம் . இசிஜி என்பது ஒரு நோயாளி ஓய்வு நிலையில் இருக்கும்போது இதயம் குறைந்த வேகத்தில் துடிக்கும் போது எடுக்கபடுகிறது என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்.

    90 சதவீதம் இதய இரத்த குழாய் அடைப்புள்ள நோயாளிக்குக்கூட இசிஜி இயல்பு நிலையில் இருக்க கூடும். நோயாளி ஓய்வாக இருக்கும் அந்த சந்தர்ப்பங்களில் , மார்பில் எந்த வலியும் இருக்காது. நடக்கும்போது , அதனால் ஏற்படும் உடலை வருத்தி வேலை செய்யும் நிலையில் இதய துடிப்பு அதிகரிக்கும்போது மார்பு இறுக்கம் அறிகுறிகள் தோன்றுகின்றன .

    இந்நிலையில் TMT . நோயாளிகளுக்கு இதய துடிப்பை படிப்படியாக அதிகரிக்க செய்து , இதய தசைகளுக்கு தேவையான இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்தல் . அதே நேரத்தில் ECG பதிவு செய்யப்படுகிறது அடைப்புகள் 70 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் இசிஜியில் மாறுபாடுகள் தெரியும் . அதை வைத்து இதய நோய் உள்ளதென அறியலாம் .

    இச்சோதனை கணிப்பொறி இணைக்கப்பட்ட கருவி மூலம் செய்யப்படுகிறது . நோயாளி , உடலை பயிற்சி செய்ய ஈடுபடுத்த வேண்டும் . இந்த உடற்பயிற்சியின் அளவு படிப்படியாக ப்ருஸ் திட்ட அளவீடு என்ற அளவீட்டின் படி அதிகரிக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சியின்போது எடுக்கப்படும் ECG மூலம் இதயத்திற்கு கிடைக்கும் இரத்தம் மற்றும் ஆக்சிஜனில் குறைவு உள்ளதா என்பதை அறிய முடிகிறது . ECG யில் மாற்றம் தெரிய தொடங்கினாலோ , இதயத்தின் வலி அல்லது ஏதேனும் அசவுகரியம் அல்லது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ நோயாளியிடம் இந்த பயிற்சியை நிறுத்தும்படி கூறலாம்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here