Home Common Health Problems உணவு பற்றிய குறிப்பைப் பதிவுசெய்யுங்கள்

    உணவு பற்றிய குறிப்பைப் பதிவுசெய்யுங்கள்

    395
    0
    SHARE

    லர் தாங்கள் தினமும் உண்ணும் உணவின் கலோரி பற்றி 20 சதம் குறைத்தே மதிப்பிடுகிறார்கள். தினமும் நீங்கள் உண்ணும் உணவைக் குறித்து வைப்பதன் மூலம் உங்களால் வெற்றிகரமாக எடையைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்கள் உணவு பற்றிக் குறிப்பு எடுங்கள்.

    நீங்கள் உணவு பற்றிக் குறிப்பேடு ஒன்று தயார் செய்வதுடன், நீங்கள் தினமும் என்ன உணவு உண்டீர்கள், எங்கே எப்போது உண்டீர்கள், நீங்கள் பசியோடிருந்த நேரம், உங்கள் மனநிலை, உணவு உண்ட பின்பு மனநிலை என எல்லாவற்றையும் குறிப்பிடுங்கள். அப்போது சில உணர்வுகள் உங்களது சில உணவு ஆசைகளைத் தூண்டுவதை அறியலாம்.

    நீங்கள் மனச்சோர்வுடன் காணப்படும்போதோ, கோபப்படும்போதோ, சோகமாய் இருக்கும்போதோ அதிகமாக உண்ணக்கூடும். உங்களுக்கு சலிப்பாக இருக்கும்போது பசியில்லாமல்கூட நீங்கள் உண்ண நேரலாம்.

    வாரம் ஒருமுறை உங்கள் உணவுக் குறிப்பேட்டைப் புரட்டிப் பார்த்து எங்கு குறை எனக் கண்டுபிடித்துத் தடைகளைக் கடந்து வெற்றி கொள்ளுங்கள்.


    முதன்மையான பிரச்னைகளைக் கவனியுங்கள்

    உங்கள் உணவுக் குறிப்பேடு உங்கள் உணவு வகையில் மோசமான எதனையும் குறிக்கிறதா? உங்கள் பிரச்னைகள் எளிதானதாகக்கூட இருக்கலாம். ஏதாவது ஒரு உணவின் மீது உங்களுக்கு ஆசை ஏற்படலாம். குறிப்பாக ஐஸ்கிரீம் உப்பு தூவப்பட்ட சிற்றுண்டிகள். அல்லது நீங்கள் உங்களுக்கு அளிக்கப்பட்ட உணவை முழுவதுமாக உண்ண நேரும்.

    இத்தகையவற்றைத் தடுக்க நீங்கள் உங்கள் மோசமான பழக்க வழக்கங்களுக்குக் காரணம் என்ன என அறிந்து, பின்னர் அதனை வருங்காலத்தில் தவிர்ப்பது எப்படி எனச் சிந்தியுங்கள். இதற்கு உதவும் சில வழிகள் இதோ:

    எதையும் உண்ணும் முன்னர் நீங்கள் உண்மையில் பசியாக இருக்கிறீர்களா எனக் கேட்டுக்கொள்ளவும்.

    சுகாதாரமற்ற உணவுக்காக நீங்கள் ஏங்கும்போது உங்கள் கவனத்தை வேறு வழியில் திசைதிருப்பவும். நண்பரிடம் பேசுங்கள், நடை பழகுங்கள்.

    சமையலறை மற்றும் சாப்பாட்டறைகளில் உணவு உண்பதைக் குறைத்துவிடுஙகள். படுக்கை அறை, வரவேற்பு அறைகளில் தேவையற்று உண்பதைத் தவிர்த்துவிடுங்கள். நடக்கும்போதும் நிற்கும்போதும் உண்ண வேண்டாம்,

    உணவு உண்ணும் போது உணவு மீது கவனம் செலுத்துங்கள். தொலைக்காட்சி பார்க்காதீர்கள், செய்தித்தாள், பத்திரிக்கை படிக்காதர்ர்கள். தொலைபேசியில் பேசாதீர்கள்.

    உங்கள் கண்களில் படாதவாறு உணவை மறைத்து வாயு கல்.

    அதிக கலோரி உள்ள உணவுகளை உண்ண வேண்டாம். அவற்றை உங்கள் வீட்டில் சேமிக்காதீர்கள். வீட்டில் இல்லையென்றால் உங்கள் வாய்க்கும் இல்லை.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here