Home Women Part கரு முதல் குழந்தை வரை – பாகம் 11

கரு முதல் குழந்தை வரை – பாகம் 11

373
0
SHARE

கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு மருத்துவமனைக்குச் சென்றால், எப்போது மாதவிலக்கு நின்றது என மருத்துவர்கள் கேட்கிறார்களே, இது ஏன்? இதை வைத்து கருத்தரித்த நாளை துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாமா?

ருத்தரித்து எவ்வளவு நாள்கள் ஆகியிருக்கும் என்பதை உத்தேசமாக மதிப்பிடுவதற்கு இந்த முதல் அறிகுறி உதவுகிறது. கடைசியாக மாதவிலக்கு நின்ற முதல் நாளில் இருந்து கர்ப்பத்தின் துவக்கத்தைக் கணக்கிடுவது வழக்கம். சில வேளைகளில் இது தவறாகப் போய்விடுவதும் உண்டு. ஏனெனில், பாலூட்டுதல் போன்ற பிற பிரச்சனைகளால் மாதவிலக்கு தள்ளிய இடைப்பட்ட காலத்தில் கூட கர்ப்பம் தரித்திருக்கக்கூடும். உடலுறவு நடந்த நாள். கடைசியாக மாதவிலக்கு நின்ற நாளுடன் ஒத்துப்போவதில்லை என்ற உண்மையை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. இருந்தபோதிலும், தற்போது உள்ள முறைகளில் இதுதான் சிறந்த முறையாக உள்ளது.

நீங்களாகவே செய்யக்கூடிய கர்பப்பரிசோதனையை மாதவிலக்கு தவறியதும் மேற்கொண்டால் நுற்றுக்குத் தொன்னூறு சதவீதம் உறுதிசெய்து கொள்ளலாம். இடுப்புக் கூட்டுப்பகுதி அல்ட்ரா -சவுண்ட் பரிசோதனையை ஆறாவது வாரத்தில் மேற்கொண்டால் எல்லா சந்தேகங்களும் அகன்றுவிடும்.

எனது பிறப்புறுப்பு திடீரென நிறம் மாறித் தெரிகிறது. வெள்ளைப்போக்கும் அதிகமாக இருக்கிறது. நோய்த்தொற்றாக இருக்குமோ என பயமாக உள்ளது. இதற்கான காரணம் என்ன?

கருத்தரித்திருந்தால், அந்தக் காலத்தில் பிறப்புறுப்புக்கு வரும் இரத்த ஓட்டத்தில் மாறுபாடுகள் இருப்பதால் அவ்வப்போது அதில் நிறமாற்றம் ஏற்படும். சில சமயம் பிறப்புறுப்பு வெளுத்தும், நீளமும் சிவமும் கலந்தும், பிரசவ சமயத்தில் பழுப்பு நிறமாகவும் மாறும். கருப்பைக் கழுத்துப் பகுதியில் கருவின் அழுத்தத்தால் உராய்வுகள் ஏற்பட்டு புண்ணாவது உண்டு. இதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படும். மற்றபடி, பிரசவத்துக்குப் பிறகு வெள்ளைப்போக்கு சரியாகிவிடும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here