Home Common Health Problems மூட்டுவாத நோய் சோதனையின் ரகசியம்; நோயின் தாக்கம் என்ன? பகுதி (2)

  மூட்டுவாத நோய் சோதனையின் ரகசியம்; நோயின் தாக்கம் என்ன? பகுதி (2)

  823
  0
  SHARE

  ஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் என்றால் என்ன என்பது பற்றி பகுதி (1) இல்  பார்த்தோம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நோய்களைப் பற்றியும் சில பரிசோதனை முறைகளையும் பார்த்தோம் அதன் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்.

   ரத்தத்தில் யூரிக் அமிலப் பரிசோதனைகள்; பெண்களுக்கு இது 100 மில்லி ரத்தத்தில் 2.4 6 மி.லி. கிராம் வரையும், ஆண்களுக்கு 3.4 7 மி.லி. கிராமும் இருக்க வேண்டும். இதற்கு மேல் அதிகமாக இருந்தால், கௌட் நோய் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சிகிச்சை பெறும்போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த அளவில் மாற்றங்கள் உள்ளனவ என்று பரிசோதித்துக் கொள்ளுவது அவசியமாகும்.

  இந்த பாரிசோதனையானது 24 மணி நேரம் வெளியாகும் மொத்தச் சிறுநீரில் யூரிக் அமிலம் 800 மி.கிராமுக்கு மேல் இருக்கிறது என்றால், கௌட் நோய் உள்ளது  என்பதனை உறுதிப்படுத்தும்.

  மேலும்  ரத்த கிரியேட்டினின் பரிசோதனை போன்ற சிறுநீரகப் பிரச்சனைக்கான பரிசோதனைகளும் ரத்தக் கொழுப்புப் புரதங்கள் பரிசோதனைகளும் இந்த நேரத்தில் அவசியமாகும்.

  கீல்வாதக் காய்ச்சல் பரிசோதனை;

  இந்த காய்ச்சல் ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ்’ எனும் பாக்டீரியாவால் உண்டாகிறது. ‘ருமாட்டிக் காய்ச்சல் என்பது குழந்தைகளிடத்தில் அதிகம் கானப்படும் ஒன்றாகும். இந்தக் கிருமி அசுத்தத் தண்ணீர், உணவு, காற்று மூலம் குழந்தைகளின் தொண்டையில் வந்து ஒட்டிக்கொள்கிறது. அங்கு புண்ணை உண்டுபன்னுகிறது. காய்ச்சலுக்கு முன்பாகவே  மூட்டுவலிக்க ஆரம்பிக்கும். இன்னும் பலருக்கு  பிரச்சனையானது  இத்துடன் சரியாகிவிடும்.

  ஆனால் ஒரு சிலருக்கு நூறில் மூன்று பேருக்கு மட்டும் அடுத்தகட்ட காய்ச்சல் தொடங்கும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயநோய் வருவதற்கான  ஆபத்தை உண்டுபன்னும்.

  ஆரம்ப கட்டத்தில் காய்ச்சலோடு பெரிய மூட்டுகளான முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, கணுக்கால் ஆகியவற்றில் வலியும் வீங்கவும் ஆரம்பிக்கும்.

  அதன் பிறகு இதய உறைகள் பாதிக்கத் தொடங்கும். இந்த சூழ்நிலையில் இதயப் பாதிப்பு எதுவும் வெளியில் தெரியாது.  என்பதால் பலரும் இதை அலட்சியம் செய்கின்றனர்.

  இந்த பாக்டீரியாவின் தாக்குதல் அடுத்த காட்டமாக இதய வால்வைத் தாக்கத் தொடங்குகிறது.

  . இது முதலில் மைட்ரல் வால்வு பாதிக்கிறது, அடுத்து அயோடிக் வால்வு தாக்கப்படுகிறது, இதைத் தொடர்ந்து ட்ரைகஸ்பிட் வால்வு, நுரையீரல் வால்வு என்று ஒவ்வொன்றாகப் பழுதடையச் செய்கிறது. இந்த நோயானது  மூன்று வயதிலிருந்து  பதினைந்து வயதுவரை யாரை வேண்டுமாலும் பாதிக்கலாம்.

  இதற்கான சரியான  சிகிச்சை எடுக்க வில்லை என்றால் பத்து  வயதுக்கு மேல் இதய வால்வுகள் பழுதாகத் தொடங்கும்.மேலும் அதன் பாதிப்பை பதினைந்து வயதுக்குல்  பாதிப்பானது கடுமையாகும்.

  மூச்சு திணறல், இருமல் வரும்போது ரத்தம் வருதல், வயிறு, கால்களில் வீக்கம் ஆகியவை இதன் தொடக்க காலமாகும். இதனை காய்ச்சலின் ஆரம்பநிலையின்  சரியான சோதனைகள் மூலம் அரிந்து கொள்ளலாம்.இதன் தொடக்க காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் இதய வால்வுப் பிரச்சனையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

  ரத்த பரிசோதனை;இயல்பான பரிசோதனையில் ரத்தப் பரிசோதனைகளில்  இதில் வெள்ளையணுக்கள் அளவும் சிவப்பணு படிதல் அளவும் அதிகமாக இருக்குமானால், ருமாட்டிக் காய்ச்சல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  சி.ஆர்.பி. பரிசோதனை;ரத்தச் சி.ஆர்.பி. பரிசோதனை இந்த அளவு 100 மில்லி ரத்தத்தில் மூன்று மிகிக்கு அதிகமாக இருக்குமானால், ருமாட்டிக் காய்ச்சல் இருக்க வாய்ப்பு உண்டு

  ஆன்டி ஸ்ட்ரெப்டோலைசின் ஓ;மற்றும் ஆன்டி ஸ்ட்ரெப்டோலைசின் ஓ பரிசோதனையில்  இது குழந்தைகளுக்கு 300 யூனிட்களுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 200 யூனிட்களுக்கு மிகாமலும் இருந்தால் ருமாட்டிக் காய்ச்சல் உறுதியாகும்.

  ஸ்வாப் பரிசோதனை;தொண்டைப்பகுதியில் ‘ஸ்வாப்’ எடுத்துக் கிருமி வளர்ப்புப் பரிசோதனை செய்தால், இந்நோய்க்குரிய கிருமிகள் தெரியவரும். இதுவும் நோயை உறுதிப்படுத்தும்

  மார்பு எக்ஸ்-ரே: இதில் இதய வீக்கம், நுரையீரல் நீர்க்கட்டு முதலியவையை தெளிவாக காட்டக்கூடியது.

  இ.சி.ஜி;மேலும் இ.சி.ஜி. பரிசோதனையில் பாதிப்பு மற்றும் இதயத் துடிப்பை கவனிக்க முடியும்.

  எக்கோ பரிசோதனை;அடுத்து எக்கோ பரிசோதனை இதில் இதய வீக்கம் மற்றும் வால்வுகளின் பாதிப்பை நாம் அறிந்து கொள்ளலாம்.

  எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர்-ராதகிருஷ்ணன் பால்ராஜ்

   

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here