Home Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 83

உறவுகள் சிறகுகள் – பாகம் – 83

118
0
SHARE

நீங்கள் காதலிக்கிற அல்லது கல்யாணம் முடிக்கவிருக்கிற நபரைப் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு வர வேண்டும். அதற்கு அவகாசம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. உங்களைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நீங்களும் என்ன மாதிரியான அபிப்ராயங்கள் வைத்திருக்கிறீர்கள், இருவரின் விருப்பங்கள் என்னென்ன, திறமைகள் என்னென்ன, இருவருக்கும் அபிப்ராய பேதங்கள் வருகிற விஷயங்கள் என்னென்ன, அந்த மாதிரித் தருணங்களில் இருவரும் எப்படி நடந்து கொள்வீர்கள், ஒரு பிரச்னையை இருவரும் எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள்… இப்படி வாழ்க்கைக்கு அடிப்படையான அத்தனை விஷயங்களிலும் இருவருக்குமான பொருத்தம் தெரிந்துகொள்ள அந்த அவகாசம் அவசியமானதுதான்.

சரி… வேறு என்னதான் பேசலாம் ?

உங்கள் விருப்பு, வெறுப்புகள், கனவுகள், லட்சியங்கள் என எல்லாவற்றையும் துணையிடம் மெல்ல மெல்லப் பகிர்ந்துகொள்ளலாம்.

பொருளாதாரம், இருவருக்குமான உடல் நெருக்கம் என சீரியஸான கமிட்மென்ட்டுகளுக்குள் நுழையாமல் இருப்பது நலம்.

காதலிக்கும் போதும், கல்யாணமான புதிதிலும் இருவரும் தங்களைப் பற்றிய பாசிட்டிவ் பிம்பத்தையே துணையிடம் காட்ட முனைவார்கள். கூடிய வரையில் உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தையக் காட்டாதீர்கள். இந்த அணுகுமுறை நீங்கள் யார் என்பதை உங்கள் துணைக்கு உணர்த்தும்.

உங்கள் இயல்பு என்ன ? உங்கள் விருப்பு, வெறுப்புகள் என்னென்ன என்பதையும் சொல்லும். உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும்.

இப்படியெல்லாம் இருப்பதில் என்ன பயன் ? உங்களுடைய தேர்வு தவறாக இருந்தால். உங்களுடைய இந்த இயல்புகளைக் கண்டு துணை தேர்வு தவறாக இருந்தால், உங்களுடைய இந்த இயல்புகளைக் கண்டு துணை தானாக விலகி விடுவார். உங்களைப் புரிந்து கொள்கிற நபர் என்றால் உங்களுடன் பயணத்தைக் தொடர்வார். இந்த இயல்புடன் இருப்பது உங்களை பலமான ஆளுமையாக உருவாக்கும். இதே இயல்பைத் தொடரும் பட்சத்தில், நேர்மையான வாழக்கையை வாழ உங்களுக்கு உதவும்.

சரி… நேர்மையான வாழ்வதால் என்ன பயன் ?

வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் விரும்பாத எதையும் செய்யத் தேவை ஏற்படாது.

ஒரு மாதிரி கருத்துகள், நம்பிக்கைகள் உள்ள துணையைக் கண்டு பிடித்து வாழ்க்கையில் இணைவது சாத்தியமாகும். நிறைவான வாழ்வு நிஜமாகும், கடைசியாக…

ஒவ்வொரு பெண்ணும் தனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். திருமணமானவரோ, ஆகாதவரோ, யாருக்கும் இது பொருந்தும். யாருக்காகவும் உங்களுடைய லட்சியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.

உங்களுக்கும் உங்கள் தேவைகளுக்கும் நேரம் ஒதுக்குவதை வழக்கமாக்கிகொள்ளுங்கள். உங்கள் நட்பும் சமூக வாழ்க்கையும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். அதற்கும் நேரம் ஒதுக்குங்கள், எக்காரணம் கொண்டும் உங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாதீர்கள்.

உங்கள் துணையிடமிருந்து உங்களுக்கு ஒரு சின்ன இடைவெளி இருக்கட்டும். உங்களுக்கான ரகசியங்கள் உங்களுடனேயே இருக்கட்டும். அந்த ரகசியங்களில் நேர்மை இருக்கும்வரை அவற்றைக் கட்டிக் காப்பதில் தவறே இல்லை.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here