Home Women Part குழந்தை வளர்ப்பு – பாகம் 73

குழந்தை வளர்ப்பு – பாகம் 73

623
0
SHARE

குழந்தைக்கு முதலில் படித்ததை எழுதி பார்க்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். எழுதி பார்த்தால் மூளை தானாகவே படித்ததை நினைவிற்கு கொண்டு வரும் . ஒருமுறை எழுதி பார்ப்பது நூறு முறை படித்ததற்கு சமம் என்பதால் பரீட்சையின் போது நன்கு நினைவில் வைத்து கொண்டு எழுத வேண்டும் .

குழந்தைக்கு எதில் ஈடுபாடு உள்ளதோ அதை வளர்க்க வேண்டும் . அதன் கற்பனை வளத்தை தூண்ட வேண்டும். அப்போது தான் புதிய எண்ணங்கள் , கற்பனைகள் போன்றவை வரும் . குழந்தைக்கு எதில் ஈடுபாடு உள்ளதோ அதை விளையாட்டாக ஆரம்பித்து பிறகு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடும் . பெற்றோர் அவர்களது விருப்பதை குழந்தையின் மீது திணிக்கக்கூடாது .

பள்ளிக்கு அனுப்பியதுடன் தனது கடமை முடிகிறது என்று நினையாமல் பெற்றோர் அடிக்கடி
ஆசிரியர்களை போய் பார்த்தோ , தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பழக்கம் வைத்து கொள்வது சிக்கல் வராது . அவ்வாறு சென்றால் தான் குழந்தையின் ஆசிரியர் யார் என்ற விவரமும் தன குழந்தையின் சக தோழர் , தோழிகள் யார் என்ற விவரமும் தெரிந்து கொள்ள ஏதுவாகும். அது பெற்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here