Home Women Part முட்டை வெளியாவது என்றால் என்ன?

முட்டை வெளியாவது என்றால் என்ன?

684
0
SHARE

மேலே சொல்லப்பட்ட விவரங்கள், உங்களுக்குப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என நினைக்கிறன். அவ்வாறு புரிந்துகொள்ள முடியாவிட்டால், மீண்டும் அதைப்பற்றி தெளிவாகச் சொல்கிறேன்.

ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி, சினைப்பை ஆகிய மூன்றும் ஒரே சமமாகச் செயல்பட்டு, தங்களுக்குள் ஹார்மோன் சீரான நிலையை உண்டாக்கிக்கொள்கின்றன.

ஹைப்போதலாமஸ் கொனடோட்ரோபிக் ஹார்மோன் எனப்படும் பாலின ஊக்கி ஹார்மோனைச் சுரந்து, எல்.எச். மற்றும் எஃப்.எஸ்.எச் ஹார்மோனைச் சுரக்கவைக்கும்.

பிட்யூட்டரி சுரப்பியானது, மாதந்தோறும் ஒரே மாதிரியாகச் செயல்பட்டு எஃப்.எஸ்.எச். ஹார்மோனைச் சுரந்து, சினைப்பையில் உள்ள ஆயிரம் முட்டைகளுக்கு மேல் தூண்டும். இந்தக் காலகட்டத்துக்குக் கருவணுக்களைத் தூண்டும் காலம் என்று பெயர்.

வயதுவந்த பெண்களின் உடலில் சுமார் ஐந்து லட்சம் முட்டைச் செல்கள் இருக்கும். இவற்றுள், 400 முதல் 500 முட்டைகள்வரை மட்டுமே முதிர்ச்சி அடையும். என்ன காரணத்தாலோ, ஆயிரத்தில் ஒரே ஒரு முட்டை மட்டுமே முதிர்ச்சி அடைந்துவருகிறது.

கரு முட்டையானது, மிகச்சிறிய கூட்டுக்குள் இருக்கும். இதற்குக் கருவணுக் கூடு என்று பெயர்.

கருவணுக் கூட்டுக் காலத்தின்போது, எல்.எச். ஹார்மோன், சினைப் பையின் தாக்கா செல்களில் செயல்புரிந்து, கிரானுலோசா செல்களில் இருந்து ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை ஆரம்பித்துவைக்கிறது. இந்த ஈஸ்ட்ரோஜென், எல்.எச். ஹார்மோனை மேலும் கூர்மையானதாக மாற்றி, கருவணுக் கூட்டைத் தூண்டி முட்டைச் செல் வளர்ச்சியை உண்டாக்குகிறது.

சினைப்பையின் வெளிப்பகுதியை நோக்கி கருவணுக் கூடு வளருவதால், அதில் உள்ள முட்டை தன்னுடைய இயல்பு நிலையைவிட நாற்பது மடங்கு பெரிதாக வளர்கிறது. முட்டையின் வளர்ச்சி முடிவடையும் தருணத்தில், சினைப்பையானது பிட்யூட்டரி ஹார்மோனிடம், எனக்கு எஃப்.எஸ்.எச். சின் தேவை போதும். நிறுத்திக்கொள்ள உதவி செய் என்று சொல்லும். இந்தத் தகவல் வந்ததும், உடனே வேறு ஹார்மோனை அனுப்பி எஃப்.எஸ்.எச். ஹார்மோனை பிட்யூட்டரி குறைத்துக்கொள்கிறது. இதற்கு ஃபீட்பேக் மெக்கானிசம் என்று பெயர்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here