Home Common Health Problems குரல் கரகரப்பாவதற்கான காரணங்கள்

    குரல் கரகரப்பாவதற்கான காரணங்கள்

    362
    0
    SHARE

    குரல்நாண் வீங்கி இயல்பான அதிர்வடையாதபோதும், கீழ் சுவாசக் குழல் அழற்சியாலும் உங்கள் குரல் கரகரப்பாகலாம். இதனால் குரல் சாதாரண நிலையை விட இயல்பற்ற நிலைக்கு மாறுகிறது. சில வேளைகளில் சத்தம் போடாத அளவுக்கு மாறி விடுகிறது.

    உங்கள் குரல் இரைப்பையின் மேலுள்ள உத்தரவிதானத்தின் உயரே உள்ள தசைகளின் இயக்கத்தால், நுரையீரலிருந்து சுவாசக் குழல்களுக்குள் குரல்நாண்கள் வழியாகக் காற்று அழுத்தத்துடன் தள்ளப்படுவதால் ஏற்படுகிறது. இவ்வாறு வெளியேறும் காற்றைக் குரல்நாண் விரித்தோ, மூடியோ வெளியேற்றும் போது குரல்நாண் அதிர்ச்சியில் உங்கள் குரல் சப்தமாக வெளிப்படுகிறது.

    குரல் காரகரப்புடன் தொண்டையில் வலியும், தொண்டைக்குள் ஏதோ உறுத்துவது போன்ற உணர்வும் ஏற்படலாம். இதனால் உங்கள் குரலின் இயல்புத்தன்மை மாற நேரிடும்.

    உங்களுக்குக் குரல் கரகரப்பு மற்றும் குரல் இழப்பு தொற்றுகளாலும் (அடிக்கடி உங்களைத் தாக்கும் புளு மற்றும் ஜலதோஷம் போன்றவற்றால்), ஒவ்வாமையாலும், மிக அதிக நேரம் அதிக சப்தத்துடன் பேசுவதாலும் (குரல் நாண் பாதிக்கப்பட்டு), புகை மற்றும் இரைப்பை உணவுக்குழல் எதிர் திரும்புவதாலும் ஏற்படுகிறது. இரைப்பை உணவுக்குழல் எதிர் திரும்புவதால் அமிலம் கலந்த உணவுக் குழம்பு குரல் எழும்பும் குழல்களில் சிதறிக் குரலைப் பாதிக்கும்.

    தடுப்புமுறைகள்

    குரலை உயர்த்திப் பேசுவதையும், கிசுகிசுப்பதையும் கூட குறைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குரல் உயர்த்திப் பேசும்போது பாதிக்கப்படுவது போலவே, கிசுகிசுக்கும்போதும் குரல்நாண் பாதிக்கப்படுகிறது.

    தொண்டையை ஈரப்பதத்தில் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும்.

    புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். புகை மாசுக்களைச் சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும். புகை தொண்டையை வறட்சி அடைய செய்வதுடன் குரல் நாணையும் பாதிக்கும்.

    மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் கூட தொண்டையை வறட்சி அடைய செய்யும்.

    நீங்கள் சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    குரல் கரகரப்பு 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை நாட வேண்டும். மருத்துவர் உங்களுக்கு தொற்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து அதற்கான மருந்துகளையோ, ஒவ்வாமைக்கான மருந்துகளையோ பரிந்துரை செய்வார். தொண்டைக் கரகரப்பு புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here