Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 70

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 70

803
0
SHARE

விந்து முந்துதல்
முன்விளையாட்டு

முன்விளையாட்டு என்பது பாலுறவுச் செய்கையின் முதல் படி: முக்கியமான படி. குறைந்தது அரை மணி நேரமாவது முன் விளையாட்டில் ஈடுபடவேண்டியது அவசியம். வார்த்தையால் வர்ணித்துப் பெண்ணைத் தூண்டுதல், வன்மையாக அல்லாமல் மென்மையாக உடலை வருடித்தூண்டுதல், மார்பகங்களைத் தவிர மற்ற இடங்களை வருடித்தூண்டுதல் மற்றும் முத்தமிடுதல் இவ்வாறெல்லாம் செய்து பெண்ணைத் தயார் படுத்த வேண்டும்.

தயார் படுத்தும்போதே தான் அவசரப்பட்டு ஈடுபட்டு விடுதல், ஆணுறுப்பால் பெண்ணின் உடலை தேய்த்தல் போன்று தன் உணர்ச்சியைத் தூண்டும் செயலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பெண்ணின் உணர்ச்சியைத் தூண்டவேண்டும். அதன்பிறகுதான் பாலுறவில் ஈடுபட வேண்டும். பாலுறவின் போது மார்பகங்களை வருடினால் அதிலுள்ள நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு இன்பம் அதிகரிக்கும். எடுத்தவுடனே அதைத் தூண்டும்போது வலிதான் மிஞ்சும்.

முன்விளையாட்டிலேயே அந்தரங்க ஆராட்டின் மூலமாக பெண்ணை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு செல்லலாம். பாலுறவு கொள்வதன் மூலமாகவே உச்சக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று நினைப்பது அறியாமை உள்ளவர்களின் எண்ணம். இதனால்தான் பலர் எடுத்தவுடன் பாலுறவு கொண்டு விட்டு விந்து முந்துதல் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். சரியான முறையில் முன் விளையாட்டில் ஈடுபட்டு விந்து முந்துவதை கட்டுப்படுத்தலாம்.


ஏளனப்படுத்தக்கூடாது

விந்து முந்தும் பிரச்சனையுள்ள பலர் தங்கள் மனைவியர் கேவலமாகப் பார்ப்பார்கள் என நினைத்தே, இரவுகளைக் கண்டு அஞ்சுபவர்களாக இருக்கிறார்கள். சிலர், மனைவியின் ஏளனப்பேச்சால் துவண்டுபோய் மனைவியரின் முகத்தைக்கூட பார்க்க தைரியமில்லாதவர்களாக துவண்டு போய் விடுகிறார்கள். இந்தப் பிரச்சனை எல்லோருக்கும் பொதுவாக வரக்கூடியது என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக தங்கள் கணவரை ஏளனப்படுத்தக்கூடாது. மாறாக உற்சாகப் படுத்த வேண்டும். அடுத்தமுறை விந்து முந்துதல் இருக்காது.

பெண் தனது கணவரின் ஆணுறுப்பைக் கைகளால் பிடித்து அழுத்துதல், விந்து வெளிப்படும் நேரத்தில் திடீரென சுருக் என தொடைப்பகுதியில் கிள்ளுதல் போன்றவற்றைச் செய்ய விந்துமுந்துதல் கட்டுப்படும்.

ஆணுறுப்பின் மூட்டுப்பகுதியை அழுத்துவதால் சிறிது வலியிருக்கும் என்றாலும் இதனால் நல்ல பலன் கிட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விந்து முந்துகிறது என்பதை உணரும்போது பாலுறுப்பை வெளியில் எடுத்துவிட்டு முன்விளையாட்டில் ஈடுபட வேண்டும். உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய பிறகு மீண்டும் பாலுறவில் ஈடுபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பாலுறவு நேரத்தை பல நிமிடங்கள் வரை நீட்டிக்க இயலும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here