Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 73

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 73

138
0
SHARE
Sad woman on bed with her husband in the background

பெண்களுக்கு சர்க்கரை வியாதியால் வரும் தொல்லைகள்

பெண்களுக்கு சர்க்கரை வியாதியால் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன என்று பார்த்தோம். அவற்றுள் மிக முக்கியமானவை உச்சக்கட்டம் எய்த இயலாத நிலை, பாலுறவின் மீது நாட்டமின்மை, வலியுள்ள பாலுறவு போன்றவை ஏற்படும்.

இந்தக் காரணங்களுள் பலவற்றை இதற்கு முன்னுள்ள அத்தியாயங்களில் கொடுத்திருக்கிறோம். சிலவற்றை மட்டும் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

வலியுள்ள மாதவிலக்கு
சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதிக்கப்படுவதோடு, பெண்ணின் பாலுறுப்புத் தசைகளும் இளகுவது குறைந்துவிடும். இதனால் பாலுறவின்போது ஆணுறுப்பு மோதுவதால் சினைப்பையில் காயம், யோனியின் உதடுகளின் காயம் போன்றவை ஏற்படும்.

பாலூட்டும் நேரம், மாதவிலக்கு முற்றும் சமயங்கள் சில நோய்கள் ஆகியவற்றின் போது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடும். இதனாலும், சில மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளாலும் பெண்ணுறுப்பு விரிந்து கொடுக்காமல் பாலுறவு பயமுறுத்துவதாக இருக்கும்.

ட்ரைகோமோனாஸ் பாக்டீரியாத் தொற்று, பாலுறுப்புத் தொற்றுண்ணிகளின் பாதிப்புகளாலும் பெண்ணுறுப்பு விரியாது.

கருத்தடைக்குப் பயன்படுத்தும் களிம்புகள், ரப்பர் பொருள்கள், நாற்றமகற்றிகள், செயற்கை நாரிழைகளால் ஆன உள்ளாடைகள் அணிதல், பெண்ணுறுப்பை வழவழப்பாக்கும் சுரப்பு நீர் குறைதல், கருப்பையிலுள்ள பைப்ரோய்ட் கழலைகள், கருப்பை திரும்பிக்கொள்ளுதல், பெண்ணுறுப்புச் சூழ்ந்துள்ள தசைகளில் தோன்றும் இறுக்கம் ஆகியவையும் பெண்ணுறுப்பு இளக்கமாவதைத் தடைசெய்கின்றன.


சில பெண்களுக்கு இயல்பாகவே சிறிய துவாரமிருக்கும் இதனாலும் பாலுறுப்பு கடினமானதாகும். கன்னித்திரை தடித்து காணப்பட்டாலும், துளையிருந்தாலும், வயதான பிறகு முதன்முறையாக பாலுறவு கொண்டாலும் கொட்டிட பாலுறவின் போது வலிக்கும்.

இப்பிரச்சனையை சரிசெய்வதற்கு முதலில் காரணிகளை கட்டுப்படுத்தவேண்டும். பிறகு சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான மருந்துகள், செய்முறைச் சிகிச்சை போன்றவற்றைப் பெற வேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here