Home Common Health Problems அனீமியா நோயில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    அனீமியா நோயில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    785
    0
    SHARE

     நம்மில் பலருக்கும் வைத்த பொருள் எங்கே வைத்தோம்? இங்கே தான் வைச்சேன் அது எங்கு போச்சினே தெரியலை, மறந்து விட்டேன்  என்ற கேள்வி நிறை நபரிடம் நாம் கேட்டிருப்போம். உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோய் ஏற்படுகிறது.

     அதில் இருந்து விடு பெறுவதற்காக இரத்தத்தில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும்  அதற்கான மருந்துகள் கடைகளில் நிறைய விற்பனைச் செய்யப்படுகிறது.

    இருந்தும், அதனை எடுத்துக் கொள்ளுவதால் மட்டுமே உடலில் இருக்கும் ரத்த அணுக்கள் அதிகரித்து விடாது. இவ்வாறு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மருத்துவர் அணுமதி இல்லாமல்  எடுக்ககூடாது. அது ஆபத்தில் முடியும்.

    மாத்திரைகள் மட்டும் சாப்பிடுவதால் குணமாகாது. அதற்கான உணவும் அவசியம் தொடரவேண்டும்.

    ஒரு சில இயற்கையான வழிமுறைகளையும் தினமும் செய்ய வேண்டும்.

    இதன் காரணமாக உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகும்.

    கவும் இருக்கும்.

    நமது உடல் நிலை அஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும், உடலுக்குத் தேவையானவையும் இருப்பது அவசியமாகும்.

    உடலில் ரத்த அணுக்களில் உற்பத்தி குறையும் போது  நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம்.

    இரத்த அணுக்களை சரியான அளவு வைத்துக் கொள்ளுவதால் மறதி நோயானது நம்மலைத் தாக்காமல் இருக்கும்.அதிக ஊட்டசத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

     இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்;

    மாதுளை: 

    மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, ஆபத்து உண்டாக்க கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, நம்மைப் பாதுகாக்கிறது.

    இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை சீராக வைத்துக் கொள்கிறது.

    நன்னாரி வேர்: 

    மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகிறது. அதிலும் இந்த வேரில் அதிகப்படியான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைப்பதற்கு உதவுகிறது.

    கற்றாழை: 

     சோற்றுக் கற்றாழையில் இரத்தத்தில் உண்டாகும் அழற்சியை தடுக்கும் ஆற்றல் அதிக அளவு உண்டு. எனவே இதனை தினமும் எடுத்துக் கொண்டால்  இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    பீட்ரூட்:

    பீட்ரூட்  இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் உள்ளது. மேலும் இதை எடுத்துக் கொள்ளுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு நல்ல இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள் ஆகும். எனவே இதனை டயர்ட்டில்  இருப்பவர்கள் அவர்கள் உணவில் எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

    இது உடலில் இருக்கும் இரத்த அணுக்களை  அதிகரிக்கச் செய்யும். பீட்ரூட் மட்டும் அல்லாது அதன் இலை வைட்டமின் ஏவும், வேரில் வைட்டமின் சி-யும் உள்ளது.  உச்சி முதல் வேர்வைரை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

    கீரைகள், காய்கறிகள்;

    நாம் அன்றாடம் பயன் படுத்தும் காய்கறிகளுடன் பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியவையாகும்.

    மேலும் இவைகள் அனைத்தும் உடல் எடையை கட்டுக்குள் இருபதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிச் செய்யும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்குவதற்கு உதவுகிறது.

     ரும்புச்சத்து நிறைந்த உணவுகள்;

    இந்த இருப்புசத்து உடலில் உறுதிக்கு ஏற்றது. இது உடலுக்கு மிகவும் அவசியமான  கனிமச்சத்து ஆகும். இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்காமல், உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டுச் செல்கிறது.

    இந்த சத்து குறைவாக இருக்குமானால் அனீமியா நோயானது உறுதியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை ஆகியவற்றின் மூலம் அதிகம் கிடைக்கின்றன  எனவே தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

    பாதாம்:

     இரும்புச்சத்து அதிகம் கானப்படும் உணவுகளில் ஒன்று பாதாம் பருப்பு. இந்த  பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைத்து விடும்.

    பழங்கள்:

     மறதி நோயாளிகலுக்கு  மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவையும் அதிகப்படுத்தும். இன்னும் அதிகப்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    கிவி பழம்: 

    இரத்தத்தில் குருதிச் சிறுதட்டுகள் குறைவாக காணப்படுவோருக்கு  கிவி பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் அதன் உற்பத்தி அதிகரிக்கும்.

     உடற்பயிற்சி: 

    நமது உடலுக்கு உணவு மட்டும் அவசியம் இடையாது. உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சி, உழைப்புக்கு ஏற்ற உணவு ஆகியவை மிகவும் முக்கியம்.

    உடல் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டும் இல்லாமல், உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவையும் அதிகப்படுத்தும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் சேர்கிறது. இதன் பலனாக இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் செயலாற்றுகிறது.

    உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். உணவில் கவனம் செலுத்தி உடலுக்கும், உழைப்புக்கும் ஏற்ற உணவை எடுத்துக் கொண்டாலே ஆரோக்கியமாக வாழலாம்.

     டாக்டர் – ராதாகிருஷ்ணன் பால்ராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here