Home Infertility தம்பதியர்களுக்கான` ஆலோசனைகள் – பாகம் 8

தம்பதியர்களுக்கான` ஆலோசனைகள் – பாகம் 8

389
0
SHARE

ணவனிடம் மனைவிக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருக்குமானால் அதை என்ன விலை கொடுத்தாவது நிறுத்திவிட வேண்டும் . அதிகமாக மது அருந்துவது , அடிக்கடி புகைப்பது , போதை மருந்து பயன்படுத்துவது , பெருந்தீனி உண்பது , குறைவாக உடற்பயிற்சி செய்து அல்லது செய்யாமல் விட்டு தொப்பையை வளர்த்து கொள்வது , மற்றவர்கள் மத்தியில் மிடுக்காக இல்லாமல் , பிறருடைய ஏவலை கேட்டு நடப்பது ,

எதிர்பாலினரிடத்தில் குழைந்து குழைந்து பேசுவது , எதிர்பாலினர் ஏதேனும் வேலைகளை சொன்னால் உடனடியாக ஓடி போய் செய்வது, எதற்கெடுத்தாலும் பயப்படுவது, துணிவில்லாமல் கோழைத்தனமாக இருப்பது , பேசுவது , கூட்டத்தை கண்டால் ஒதுக்குவது , உயர்ந்தவரிடம் பேசும்போது காட்டுகிற தேவையில்லாத அடக்கம் , தன் உடலை பற்றியோ மனைவியின் உடல் நிலை பற்றியோ அக்கறை காட்டாதது. பணம் சம்பாதிக்கும் திறமையில்லாது இருத்தல். அல்லது பணத்தை கையாள தெரியாமல் இருத்தல்.

இப்படித்தான் மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத விஷயங்களும் இருக்கும் . எந்த ஆண் மகனும் மாற்றான் தோட்டத்தை எட்டி பார்க்க தயங்கமாட்டான் . ஆணின் மனம் இயல்பாகவே கவர்ச்சியை நாடும் தன்மை பெற்றது என்பதால், அவனுக்கு சொந்தமான தோட்டமாகிய நீங்கள் , அவனது மனதுக்கும் , கண்களுக்கும் கடிவாளம் போடும் அளவுக்கு உங்களை சீவி சிங்காரித்து கொள்வதில் தப்பில்லையே.

பிறர் குறைகூறாத வகையில் நடந்து கொள்வதும் , கணவன் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதும் அவனுக்கு பிடித்தமானவை. உங்களுடைய பெற்றோர் , உறவினர்களிடம் எவ்வாறு கணவன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்கிறீர்களோ , அப்படி நீங்களும் நடந்து கொள்ள வேண்டும் . அந்த நிலையை ஓரேயடியாக கொண்டுவர முடியாது என்றாலும் பழக்க படுத்தி கொள்ளலாம் .

இவ்வாறு கணவனும் மனைவியும் நடந்து கொளுத்தும்போது உங்களுக்குள் மட்டுமல்ல , உங்களை சுற்றியிருக்கிற பிறர் கண்களுக்கும் நீங்கள் உயர்வான காதலர்களாக தெரிவீர்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here