Home Common Health Problems சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பது எப்படி?

    சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பது எப்படி?

    584
    0
    SHARE

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக வைத்து கொள்வதில்லை என்றால் பிறகும் குழந்தை மோக்ரோசோனிக் குழந்தை (பெரிய குழந்தை) அல்லது சர்க்கரை குழந்தை என்று சொல்வார்கள்.

    1.சர்க்கரை உள்ள ஒரு பெண் கர்ப்பகாலத்தில் சரியான அளவு சர்க்கரையுடனும் சரியான அளவு உணவும் உட்கொள்ள வேண்டும்

    2. சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருந்தாலோ அல்லது மிக அதிகமாக இருந்தாலோ குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    ஒரு சர்க்கரை நோய் உள்ள பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன் செய்ய வேண்டியது?

    சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் ஊசி மூலமோ அல்லது மாத்திரையின் மூலமோ எடுத்துக் கொள்ளலாம்.

    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க வேண்டும்

    வைட்டமின் மாத்திரைகளை போலிக்ஆசிட் மாத்திரைகளை குறைந்தது மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சர்க்கரையின் சரியான அளவு எவ்வளவு?

    சாப்பிடுவதற்கு முன் (Fasting)<100
    சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் (PP)<140
    HbA1c- யின் அளவு < 6
    போலிக்ஆசிட்ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

    ஒரு சர்க்கரை நோய் உள்ள பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து போலிக்ஆசிட் 5 எடுத்துக் கொள்ள வேண்டும். இது எந்தவித குறையும் இல்லாத நலமான குழந்தை பிறக்க உதவும்.

    டைப்-1 சர்க்கரை நோய் உள்ள பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

    இந்த வகையான நோய் உள்ள பெண்களை கர்ப்பத்தை தள்ளி போடா கூடாது.

    இவர்களுக்கு சிறு வயதிலிருந்தே சர்க்கரை நோய் இருப்பதால் மற்ற உடல் பிரச்சனைகள்

    இரத்த அழுத்தம், இதய கோளாறு, சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கு முன் இந்த உடல் பிரச்சனைகள் சரி செய்து கொள்வது நல்லது.

    இவர்களுக்கு Sugar Pump or Insulin Pump மற்றும் Sugar Monitoring போன்ற நவீன கருவிகளை கொண்டும் சிகிச்சை செய்து கொள்வது நல்லது.

    சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் சர்க்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டு இன்சுலின் ஊசிகளை போட்டு கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்களே ஏன்?

    டைப் -2, சர்க்கரை நோய் உள்ள பெண்கள் Metformin போன்ற சர்க்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டு இன்சுலின் ஊசிகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் பல ஆராய்ச்சிகளில் கர்ப்பகாலத்தில் Metformin மாத்திரைகளை விட இன்சுலின் ஊசிகளே கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    Pre-Gestational Diabetic உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சர்க்கரை நோயால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
    Recurrent Birth (குழந்தை இறந்து பிறத்தல்)
    Still Birth (குழந்தை இறந்து பிறத்தல்)
    Cardiac and Neurological Malformations (இதய மற்றும் நரம்பியல் குறைபாடுகள்)
    Hypoglycemia (இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு )
    Respiratory Distress Syndrome (சுவாச நோய் )
    Jaundice (மஞ்சள் காமாலை)
    Hypocalcemia (Low Calcium) ஹைபோகால்சமியா (குறைந்த கால்சியம்)


    சினைப்பையில் நீர் கட்டிகள் உள்ள பெண்கள்(PCOS) என்ன செய்ய வேண்டும்?

    இவர்களுக்கு சர்க்கரை நோய் இல்லையென்றாலும் Abnormal Glucose Tolerance உள்ளவர்களாக இருப்பார்கள்.

    இவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகமிக அவசியம்

    இவர்களுக்கு உடல் எடை குறைப்பு அவசியம்

    இவர்களுக்கு Life Style Modification மிகமிக அவசியம்

    இவர்கள் இதையெல்லாம் செய்தல் தான் கருத்தரிக்க இயலும்.

    கர்ப்ப கால நீரிழிவிலிருந்து தப்புவது எப்படி?

    நீரிழிவு என்ற வார்த்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் அதுவரை எந்தச் சம்பந்தமும் இருக்காதுதான். தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)
    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்
    படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் – 1 அல்லது டைப் – 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்… இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார்?25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.இதற்கு முக்கியமான காரணிகள்…

    *குடும்பப் பின்னணியில் நீரிழிவு
    *4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
    *திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
    *சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
    *பருமன், அதிக எடை
    *முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
    *நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
    *அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
    *பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
    *முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்…கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    கர்ப்ப கால நீரிழிவின் பாதகங்கள்
    *பருமன்
    *அடுத்த கர்ப்ப காலத்தில் முன்கூட்டியே நீரிழிவு ஏற்படுதல்
    *Glycosuria பிரச்னை
    *குடும்பப் பின்னணியில் கர்ப்ப கால நீரிழிவு சேர்தல்.
    பிறப்பு சார்ந்த அசாதாரண மாற்றங்கள்
    *கார்டியாக் எனும் இதயக் கோளாறுகள்…
    இதயத்தின் இடது, வலது வென்டிரிகிள்களைப் பிரிக்கும் சுவரில் பழுது, ஆக்சிஜன் அதிகமுள்ள ரத்தமும்
    ஆக்சிஜன் குறைவான ரத்தமும் கலந்து பிரச்னை ஏற்படுதல். இது போன்ற இதயம் சார்ந்த பிரச்னைகள் அதிக அளவு உண்டாகும் அபாயம் உள்ளது.
    *மத்திய நரம்பு மண்டலம்…
    குழந்தையின் தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சிக்கல்கள் ஏற்பட 7.2% அளவு வாய்ப்பு உள்ளது.
    *எலும்பு சார்ந்த பிரச்னைகள்…அன்னப்பிளவு, சீரற்ற உதடு மற்றும் முதுகுத்தண்டில் வளர்ச்சிப் பிரச்னைகள்.
    *சிறுநீரகக் குழாய் அமைப்பில் குழப்பங்கள், இரட்டிப்பாக உருவாகுதல், சிறுநீரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ வளர்ச்சி அடையாமல் இருத்தல்…
    *வயிறு, குடல் சார்ந்த பிரச்னைகள்…
    மலக்குழாய் உருவாகாமல் இருத்தல் அல்லது தவறான இடத்தில் உருவாகுதல்.
    *உறுப்புகள் சாதாரணமாக இருக்க வேண்டிய இடத்தில் உருவாகாமல் எதிரும் புதிருமாக அமைதல்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்?
    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.
    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்… தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
    *எடை கூடுதல்
    *உயர் ரத்த அழுத்தம்
    *கரு கலைதல்
    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
    *டைப் – 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்… சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்
    *பிறப்புநிலைக் கோளாறுகள்
    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு
    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
    *மஞ்சள் காமாலை
    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)
    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்
    *குறைப் பிரசவம்
    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்
    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    Dr Jeyarani
    – ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here