Home Infertility தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 15

தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 15

480
0
SHARE
48978728 - portrait of in love young couple in town

குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதித்தால் போதாது . மற்றவர்கள் பழிக்காதவாறு குடும்பத்தை நடத்தி செல்ல வேண்டும். மனைவியை பாதுகாத்தல், குழந்தைகளுக்கு தேவையான உணவு , உடை மற்றும் விளையாட்டு பொருட்கள் உட்பட அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும், பிறருடன் இணக்கமாக இருக்கவும் கற்று தருவது , பிறரிடம் தான் மரியாதையுடன் நடந்து கொள்வது , உறவு முறைகளை மதிப்பது , அனுசரிப்பது , பாதுகாப்பு உணர்வுடன் நடந்து கொள்வது என குடும்பத்தை ஒட்டி வருகின்ற அனைத்தும் குடும்ப பொறுப்பின் அங்கங்களாகும்.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து , கல்வி கற்க உதவி அவர்கள் முன்னேற ஈடுபாட்டுடன் உழைத்து , பணம் சம்பாதிப்பது கணவனின் பொறுப்பு என மனைவி எதிர் பர்ர்ப்பாள்.இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது

குழந்தை வளர்ப்பில் தன் பங்களிப்புடன் தந்தையும் அதிக நேரம் ஒதுக்கினால் தான் அவர்கள் சாதனையாளர்களாக, வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ இயலும் என நினைப்பார்கள் . தன் குழந்தை வளர்ப்பில் தன்னோடு கணவனும் கூட்டாக இணைந்து பாடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளது உணர்வு பூர்வமான தேவையாக மாறுகிறது .

அனைவரும் குழந்தைகள் வெற்றியாளர்களாக வரத்தான் பாடுபடுகிறோம். ,குடும்ப பொறுப்பு சார்ந்த உணர்வு தேவை தம்பதியர் இருவருக்கும் இருந்துவிட்டால் , ஒருவர் மீது ஒருவர் கரிசனம் காட்டுவீர்கள். நிறைய காதல் யூனிட்டுகள் சேர்க்கபடும் . காதல் மலரும்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here