Home Common Health Problems பனிகால பிரச்னைகள் என்ன? மருத்துவம்;

  பனிகால பிரச்னைகள் என்ன? மருத்துவம்;

  592
  0
  SHARE

  மது உடலில் முக்கியமான உறுப்பு; பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகும். கேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை ஆகும். அதில் ஒன்று பாதித்தாலும்  அதன் தொடர்ச்சியாக அடுத்தது பாதிக்கப்படும்.

  ஆனால் இந்த பாதிப்பைப் பற்றிய தகவல்கள் இன்னும் மக்களிடம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

  காது, மூக்கு, தொண்டையில் உண்டாகும் பிரச்சினைகளை நாம் கண்டு கொள்ளுவது கிடையாது. அது பெரிய விஷயமாகவே பார்ப்பது கிடையாது. இந்த பாதுகாப்பு இல்லாமல் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

  மூக்கில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன?

  மூக்கு சவ்வு விலகுதல், மூக்கின் சில்லு தள்ளி இருத்தல், மூக்கின் வால்வு சுருங்கி விரிதல், மூக்கு, தொண்டை பகுதியில் அடைப்பு உண்டாதல் போன்றவைகளால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில் வீக்கம், மற்றும் எரிச்சல் ஏற்பட்டு நீர் சுரக்க ஆரம்பிக்கிறது.

  இதன் பாதிப்பானது மூக்கடைப்பு, அதன்பிறகு கண், காது, மூக்கு, தொண்டை இவற்றை பாதித்து அதிகமாக நீர் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு மூச்சிரைப்பு, வாசனைகளை நுகர முடியாமை, காதடைப்பு, ‘சைனஸ்‘ போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

  சாதாரன வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளியானது ஒரு வாரம் மட்டுமே இருக்கும். பின்பு அது சரியாகிவிடும் இது தொடர்ந்து இருந்துவந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

  இயல்பாகவே பூக்கள் அதிகமாக பூக்கும் மாதங்களில் காற்றில் மகரந்த துகள்கள் பறந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சுவாசிக்கும் போது  அவைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குகிறது. இந்த நேரத்தில் நாம் பயன்படுத்தும் மெத்தை, தலையணை, போர்வைகள், பாய், திரைச்சீலை, சோபா கவர் ஆகிவற்றை அடிக்கடித் துவைத்து வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். தூசு, படியாதவாறு வீட்டை அடிக்கடி சுத்தப்படுத்துவது அவசியமாகும்.

  வெயில் காலத்தைவிட பனிக்காலத்தில், 70 சதவீதம் வைரஸ் கிருமி தொற்றால் தொண்டை கட்டுதல் உண்டாகிறது. இந்த மாதிரியான பாதிப்புக்கு உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடித்துவரலாம்.

  தொண்டையில் கரகரப்பு உண்டாவதற்கு சளி, கட்டி வளர்ச்சி, வயிற்றில் அமிலம் சுரத்தல் போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.

  குளித்து முடித்தபின் சிலர் , காதுகளை அடிக்கடி ‘பட்ஸ்‘ மற்றும் குச்சி கொண்டு சுத்தம் செய்வார்கள் அது முற்றிலும் தவறானது. அதுபோலவே காதுகளில் எண்ணெய் ஊற்றுவதும். இது ஒருசில நேரங்களில் ஆபத்தில் முடிந்து விடும்.

  இவ்வாறு அடிபட்டால் காதுகளுக்குள் இருக்கும் சவ்வு கிழிந்து சீழ் பிடித்து பாதிப்பை ஏற்படுத்தும்.

  அம்மைகட்டு, காது நரம்புகள் பலவீனம் ஏற்படுதல் போன்றவற்றால் காதின் நடுச்செவியில் நீர்க்கோர்வை உண்டாகும்.
  இதன் பாதிப்பால் காது கேளாமை, தலைசுற்றல், கிறுகிறுப்பு  உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால் அது நீர்க்கோர்வையானது ’கொலஸ்டிடோமா’’ எனும் எலும்பு அரிப்பு நோய் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பிரச்னை மேலும் தீவிரமாகி மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு இறுதியில் ’கோமா’ நிலைக்கு கொண்டுபோய்விடும்.

  சிகிச்சை முறைகள்;

  லேசர் கருவிகள் மூலமாக செவிப்பறையில் துளையிட்டு நடுச்செவியில் தேங்கி இருக்கும் நீரை அகற்றுவார்கள். காற்று அழுத்தத்தை சீர்படுத்த, சிறிய டியூப்’ நடுச்செவியில் பொருத்தப் படும். இது காதில் இருக்க கூடிய நீர்க்கோர்வையை நீக்கிவிடும்.

  இது இல்லாமலும் மைக்ரோ லேசர்’சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

  செவிப்பறை முற்றிலும் சேதம் அடைந்துவிட்டால், அவரவர் திசுவின் மூலமாக மாற்று செவிப்பறையை உருவாக்க இயலும். செவி எலும்புகள் பாதித்துவிட்டால்’ சிகிச்சை மிகவும் கடினமாகும். செயற்கை எலும்பு மூலமாக மட்டுமே சரிசெய்ய முடியும்.

  டாக்டர்- ராதாகிருஷ்ணன்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here